2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

நவம்பர் மாதத்தில் வெளிநாட்டவர்கள் பெருமளவான அரச முறிகளை கொள்வனவு

Kogilavani   / 2013 டிசெம்பர் 03 , பி.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்த ஆண்டில் இரண்டாவது மாதமாக வெளிநாட்டவர்கள் இலங்கையின் அரச முறிகளை கொள்வனவு செய்வதில் அதிகளவு அக்கறை செலுத்தியிருந்ததாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கைக்கு அமைவாக, ஜுலை மாதத்தில் கொள்வனவு செய்திருந்த அரச முறிகளின் பெறுமதியை விட, நவம்பர் மாதப் பெறுமதி குறைவாக காணப்பட்டதாகவும், வெளிக்கள முதலீட்டாளர்கள் நவம்பர் மாதத்தில் அமெரிக்காவின் பொருளாதார நிலை மீட்சி பெறும் எனும் எண்ணத்தின் காரணமாக சிலமுதலீடுகளிலிருந்து விடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு உரிமையாண்மை நவம்பர் மாதத்தில் 479.1 பில்லியன் ரூபாவாக பதிவாகியிருந்தது.

இது ஒக்டோபர் மாதத்தில் 475.1 பில்லியன் ரூபாவாக காணப்பட்டது. ஜுலை மாதத்தில் இந்த பெறுமதி 503.1 பில்லியன் ரூபாவாக பதிவாகியிருந்தது. இந்த வருடத்தில் மொத்தமாக இந்த பெறுமதி 20.5மூ அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .