
இந்நாட்டு சோயா உற்பத்தியில் புத்தாக்கங்களை ஏற்படுத்திய லங்காசோய் அண்மையில் நடைபெற்ற 12ஆவது SLIM சிறந்த வர்த்தகநாமங்கள் விருதுகள் வழங்கும் நிகழ்வில் ஆண்டின் சிறந்த வர்த்தக நாமத்திற்கான தங்க விருது உள்ளடங்கலாக 4 தங்க விருதுகளை வென்றுள்ளது. மேலும் ஆண்டின் சிறந்த உள்நாட்டு தயாரிப்புக்கான தங்க விருது, ஆண்டின் சிறந்த தயாரிப்புக்கான தங்க விருது, ஆண்டின் புத்துருவாக்க உற்பத்திக்கான தங்க விருதுகளை வென்றுள்ளதுடன், இந் நிகழ்வில் அதியுயர் விருதாக கருதப்படும் ஆண்டின் சிறந்த வர்த்தகநாமத்திற்கான தங்க விருதினை லங்காசோய் வென்றுள்ளது.
குறைவான தரத்துடன் சோயா உற்பத்தி செய்யப்பட்ட யுகத்தில், முற்றுமுழுதாக அதனை மாற்றியமைத்து சோயா உற்பத்தியின் தரம் லங்காசோய் மூலம் மேம்படுத்தப்பட்டது. இலாபகரமான உணவாக கருதப்பட்ட சோயா தேசியளவில் உற்பத்தி செய்யப்படாத காலப்பகுதியில், இறக்குமதி செய்யப்பட்டு பொதியிடப்படாத நிலையில் உள்நாட்டில் விற்பனை செய்யப்பட்டன. இருப்பினும் லங்காசோய் முதற்தடவையாக, இந்நாட்டு சோயா உற்பத்திகளுக்காக வெளிநாடுகளிலிருந்து நவீன இயந்திரங்களை வரவழைத்து இலங்கையின் தரத்திற்கமைய, சுகாதாரமான முறையில் சோயா உற்பத்தியை அறிமுகம் செய்திருந்தது. இன்று, சோயா உற்பத்தி துறையில் முன்னோடியாக லங்காசோய் திகழ்கிறது.
உற்பத்தி நடவடிக்கைகளின் போது பாதுகாப்பு மற்றும் அதியுயர் தரம் பேணப்படுவதன் காரணமாக லங்காசோய் தயாரிப்பு SLS, ISO, HACCP மற்றும் GMP தரச் சான்றிதழ்களை பெற்றுள்ளது. இலங்கையில் முதற்தடவையாக, சோயா உற்பத்திக்காக SLS தரச்சான்றிதழை பெற்ற முதல் வர்த்தகநாமமாக லங்காசோய் விளங்குகின்றது.
தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகளின் மூலம் வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு பொருந்தக்கூடிய சோயா தயாரிப்பினை அறிமுகம் செய்ய லங்காசோயினால் முடிந்துள்ளது. சைவப்பிரியர்களின் விருப்பத்துக்குரிய ஆகாரமாக விளங்கிய சோயாவினை வெஜிசோய், மாலுசோய், சிக்கோசோய் ஆகிய மூன்று சுவைகளில் அறிமுகம் செய்து அனைவரது கவனத்தையும் பெற்றது. மேலும் சிக்கன், எம்புல்தியல், பொலொஸ் மற்றும் யாழ்ப்பாண கறி மற்றும் கணவாய் மீன் ஆகிய சுவைகளில் தயாரிப்புக்களை அறிமுகம் செய்து புரட்சியை ஏற்படுத்தியிருந்தது.
சோயா உணவு தயாரிப்பின் போது எதிர்கொள்ளும் பிரச்சனைகளை குறைக்கும் நோக்கிலும், பரபரப்பான இல்லத்தரசிகளுக்கு ஆதரவளிக்கும் வகையிலும் PACK TO PAN எனும் பெயரில் நவீன சோயா உற்பத்தியை லங்காசோய் அறிமுகம் செய்திருந்தது. BBQ, தாய் சில்லிசிக்கன் மற்றும் பிளெக் பெப்பர் மற்றும் கலமாரி(கணவாய்) போன்ற சுவைகளில் PACK TO PAN தயாரிப்பு அறிமுகம் செய்யப்பட்டன.
இந்த வெற்றி குறித்து CBL நிறுவனத்தின் துணை நிறுவனமான கன்வீனியன்ஸ் ஃபூட்ஸ் லங்கா பிஎல்சி நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் முகாமையாளர் வசந்த சந்திரபால கருத்து தெரிவிக்கையில், 'லங்காசோய் உற்பத்திகளை அதிகம் விரும்பும் வாடிக்கையாளர்களே இந்த விருதுகள் வெல்வதற்கு பிரதான காரணமானவர்கள்'. 'லங்காசோய் வர்த்தகநாமமானது எந்நேரமும் வாடிக்கையாளர்களின் தேவைகளை இனங்கண்டு நவீன மாற்றங்களுடன் சந்தையில் நுழைந்த ஓர் தயாரிப்பாகும். போசணை, தூய்மை மற்றும் சுவை போன்ற காரணங்களினால் வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபல்யமடையவும், சந்தையில் போட்டித்தன்மையை உருவாக்கவும் எம்மால் முடிந்துள்ளது' என மேலும் அவர் தெரிவித்தார்.
'SLIM வர்த்தகநாம சிறப்பு விருது வழங்கும் நிகழ்வு தேசிய விநியோகஸ்தர்களுக்கு வெகுமதிகளை வழங்கி கௌரவிக்கும் ஓர் நிகழ்வாகும். இதன் போது உற்பத்தி மற்றும் சேவைகள் உள்ளடங்கிய 12 பிரிவுகளில் சிறப்பாக செயலாற்றியவர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. சிறப்பாக செயலாற்றிய CBL நிறுவனம் இம்முறை விருதுகளை வென்று குவித்துள்ளது' என சிலோன் பிஸ்கட்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளரும், விற்பனை பிரிவின் பிரதான நிறைவேற்று அதிகாரியுமான நந்தன விக்ரமகே தெரிவித்தார்.
இம்முறை SLIM விருது வழங்கும் நிகழ்வில் 120 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்று அதிகப்படியான விண்ணப்பங்களை பெற்ற ஆண்டாக 2013 பதிவாகியுள்ளது.