2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

இத்தாலியின் வெரின்லெக்னோவுடன் இணையும் லங்கெம்

A.P.Mathan   / 2013 டிசெம்பர் 04 , மு.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கையிலுள்ள நுகர்வோருக்கு, அவர்களின் மரப்பலகை மேற்பரப்புகளுக்கு இத்தாலிய நுணுக்கத்துடனான உலகத்தரம் வாய்ந்த அலங்கார அனுபவத்தை வழங்குவதற்காக லங்கெம் சிலோன் PLC இத்தாலியின் வெரின்லெக்னோவுடன் இணைந்து, விசேட மரப்பலகை பூச்சுகளில் அதன் சேவைகளை விஸ்தரித்துள்ளது.
 
இந்த பங்காளித்துவம் மூலம் இலங்கை நுகர்வோருக்கு பலதரப்பட்ட நீரை அடிப்படையாகக் கொண்ட மரப்பலகை பூச்சுகள், விசேட தோற்றம் தரும் மரப்பலகை பூச்சுகள் மற்றும் உயர்தர PU மரப்பலகை பூச்சுகள் என்பன எதிர்வரும் வாரங்களில் கிட்டும்.
 
ஃபுளோரன்சுக்கு அருகில் அமைந்துள்ள டஸ்கணியில் உள்ள மொன்டிகட்டினியில் தலைமையலுவலகத்தைக் கொண்டுள்ள வெரின்லெக்னோ, இத்தாலி முழுவதும் 25 களஞ்சியசாலைகள் மற்றும் 30 முகவர்களைக் கொண்டுள்ளது. 1975இல் ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவனம் அண்மையில் தனது வெளிநாட்டு சந்தைகளைப் பலப்படுத்தியுள்ளதுடன், தற்போது கிறீஸ், ஸ்பெயின், போலந்து, ரோமானியா, இஸ்ரேல், ஜேர்மனி, பல்கேரியா, ரஷ்யா, உக்ரேன், இந்தியா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் வர்த்தகத்தை விஸ்தரித்து உள்ளது.
 
வெரின்லெக்னோ வருடாந்தம் 8000 டன் உற்பத்தி இயலளவை கொண்டுள்ளதுடன், நிபுணத்துவமிக்க தொழில்நுட்ப உதவிகளையும் சிறப்பான சேவையையும் வழங்குகின்றது. அதன் சகல உற்பத்திகளும் கடுமையான தரக்கட்டுப்பாட்டுக்கு உட்படுவதனால் உயர் தரம் உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ளது.
 
லங்கெம் சிலோன் PLC இன் பணிப்பாளர் ருவன் ரீ. வீரசிங்க, 'இந்த பங்காளித்துவமானது, வேகமாக வளர்ந்து வரும் எமது வாடிக்கையாளர் தளத்துக்காக கூடுமானவரை சிறப்பான உற்பத்திகளை வழங்கும் எமது அர்ப்பணிப்பை உறுதிப்படுத்துகின்றது. 'ரொபியலக் அக்குவாசீPல்ட்' எனும் பெயரில் கிடைக்கவுள்ள வெரின்லெக்னோ உற்பத்திகள் இத்தாலிய தரத்திலமைந்ததாக இருக்கும். நாம் ஈடுபடும் துறைகளில் முன்னணி செயற்பாட்டாளராக திகழும் எமது இலக்குக்கு அமைய, ஒவ்வொன்றிலும் எமது நிலையை தக்க வைத்துள்ளோம்' எனத் தெரிவித்தார்.
 
வெரின்லெக்னோ இத்தாலி நிறுவனத்தின் ஸ்தாபகப் பணிப்பாளரான சன்ட்டே ஸண்டோ, 'லங்கெம் ரொபியலக்குடன் இணைந்து இலங்கையின் மரப்பலகை பூச்சு சந்தையில் புரட்சியை ஏற்படுத்துவதில் எமக்கு மகிழ்ச்சி. எமது உற்பத்திகள் எந்த காலநிலைக்கும் பொருத்தமானதாக காணப்படுகின்றது. வெப்பமண்டல நாடான இலங்கையின் பரப்பலகைகளுக்கும் விசேட பராமரிப்பு தேவையாகவுள்ளது. சந்தேகத்துக்கு இடமின்றி வெரின்லெக்னோ உற்பத்திகள் இலங்கையின் அனுபவத்துக்கு மேலும் வலுசேர்க்கும்' எனத் தெரிவித்தார்.
 
'ரொபியலக்' வர்த்தக குறியீட்டு உற்பத்திகளை தயாரித்து சந்தைப்படுத்துவதன் மூலம் பிரபல்யமான லங்கெம் பெயின்ட்ஸ் லிமிட்டட், இலங்கையின் மிகப்பெரிய 100% உள்நாட்டவருக்குச் சொந்தமான நிறப்பூச்சு உற்பத்தியாளராகவும் சந்தைப்படுத்துனராகவும் உள்ளது. இத்துறையின் முன்னோடியாகவும் உள்ள இந்நிறுவனம், கிட்டத்தட்ட 3 தசாப்தத்துக்கும் அதிகமான பரந்துபட்ட அனுபவத்தைக் கொண்டுள்ளது. 
 
லங்கெம் உற்பத்திகள் decorative, industrial, epoxies, primers, ancillary, anti corrosives, auto refinish மற்றும் பலகை பராமரிப்பு உற்பத்திகள் போன்ற பல்வகைப்பட்ட இலங்கை நிறப்பூச்சு பாவனையாளர்களுக்கு தேவையான உற்பத்திகளை உள்ளடக்கியுள்ளது. 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .