2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

தலவத்துகொட ஹேமாஸ் வைத்தியசாலையில் 'கோல்டன் ஹவர்' அவசர சிகிச்சை பிரிவு

A.P.Mathan   / 2013 டிசெம்பர் 18 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


'விபத்தின் போது ஏற்படும் மோசமான காயங்கள் மற்றும் தீவிரமான மருத்துவ நிலைமைகள் ஏற்பட்ட முதல் 60 நிமிடங்களுள் நோயாளிக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படின், நிச்சயமாக பெரும்பாலான உயிர்களை காப்பாற்ற முடியும்' என தலவத்துகொட ஹேமாஸ் வைத்தியசாலையின் பொது முகாமையாளர் வைத்தியர். சமிளா ஆரியநந்த தெரிவித்தார். நோயாளியின் உயிரை தீர்மானிக்கும் இந்த 60 நிமிடங்கள் 'பொன்னான நேரம்' ஆக கருதப்படுகிறது. இந்த 60 நிமிடங்களுள் நோயாளியை மிக விரைவாக வைத்தியசாலைக்கு எடுத்துச்சென்று ஆதரவு ஊழியர்கள் மூலம் முதலுதவிகளையும், தேவையான சிகிச்சைகளையும் வழங்குவதன் ஊடாக நோயாளியின் உயிரை நிச்சயமாக காப்பாற்ற முடியும்' என மேலும் அவர் தெரிவித்தார்.
 
'ஒரு சில நிமிடங்களிற்குள் ஒட்சிசன் வழங்கினால் மாத்திரமே மனித உடலின் திசுக்களை சரி செய்து, புதுப்பித்துகொள்ள முடியும் என்பதால் விரைவாக நோயாளியை மருத்துவமனைக்கு கொண்டு வருதல் மிக முக்கியம். இல்லையென்றால், திசுக்கள் நிரந்தரமாக சேதமடைவதுடன், ஒட்சிசன் வழங்கப்படாததால் முக்கிய உறுப்புக்களும், இதயமும் செலலிழக்க நேரிடும்' என டாக்டர்.ஆரியநந்த தெரிவித்தார்.
 
ஹேமாஸ் ஹொஸ்பிட்டல்ஸின் 24 X 7 மணிநேர அவசர சிகிச்சை பிரிவில் அவசர நிலைமைகளின் போது விரைவாக செயல்படக்கூடிய வகையில் நன்கு பயிற்சியளிக்கப்பட்ட வைத்தியர்களும், பணியாளர்களும் உள்ளனர். இவ் வைத்தியசாலை ஆரம்பிக்கப்பட்ட முதல் இதுவரை 2,500 நோயாளர்களுக்கு சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளன. அதன் உள்ளக வடிவமைப்பு, உயர் தொழில்நுட்ப உபகரணங்கள் மற்றும் நோயாளர்களுடன் நட்பாக பழகும் தன்மை போன்றன நோயாளிக்கு தனிப்பட்ட பராமரிப்பினை வழங்குகிறது.
 
இந்த வைத்தியசாலை அறுவை சிகிச்சைக்கான அனைத்து விதமான அவசர பராமரிப்புகள், குழந்தை மருத்துவம், மகளிர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான வசதிகளை கொண்டுள்ளது. தலவத்துகொட ஹேமாஸ் வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவானது துல்லியமாக நோயினை கண்டறிந்து உடனடி சிகிச்சைகளை வழங்குவதற்கான நிபுணத்துவம் மற்றும் நெறிமுறைகளை கொண்டுள்ளது.
 
சமூகத்திலுள்ள நபர்களின் வாழ்க்கை முறைக்கமைவாக அவர்களின் ஆரோக்கியம் தொடர்பான இடர் நிலைகளிலிருந்து பாதுகாக்கும் வகையிலும், இந்த நடவடிக்கைகளின் மூலம் இருதயம் தொடர்பான நோய்கள், நீரிழிவு, உயர் குருதி அழுத்தம் மற்றும் புற்றுநோய் போன்றவற்றுக்கெதிராக தம்மை பாதுகாத்துக் கொள்ளும் வகையிலும் அண்மையில் ஹேமாஸ் வைத்தியசாலையில் ஆரோக்கியமான கழகத்தை அங்குரார்ப்பணம் செய்துள்ளதாக ஹேமாஸ் ஹொஸ்பிட்டல்ஸ் பிரைவேற் லிமிடெட்டின் முகாமைத்துவ பணிப்பாளரான பஞ்சன் நவரட்னம் தெரிவித்தார். 'முற்கூட்டியே கண்டறிந்து அவற்றுக்கு ஏற்ப ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை பின்பற்றுவதன் மூலம் தொற்றா நோய்களை தடுக்க முடியும் என்பது எமது எண்ணமாகும்' என அவர் வலியுறுத்தினார். 
 
தலவத்துகொட ஹேமாஸ் வைத்தியசாலை 60 படுக்கைகளை கொண்டமைந்துள்ளதுடன், உயர் தொழில்நுட்ப வசதிகளை தன்னகத்தே கொண்டுள்ளது. வருடமொன்றுக்கு சுமார் 150,000 நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்கக்கூடிய திறன் வாய்ந்ததாக அமைந்துள்ளது. புதிய அனுபவத்துடன் சிறந்த நோயாளர் பராமரிப்பு சேவைகளை வழங்கும் வகையில் தாதியர்களுக்கு பயிற்சி வழங்கவென தனது சுய பயிற்சி நிலையத்தை கொண்டுள்ளது. அவுஸ்திரேலிய சுகாதார தர நிறுவகத்தின் (ACHSI) அனுமதியை பெற்ற இலங்கையின் ஒரேயொரு வைத்தியசாலை தொடர் ஹேமாஸ் வைத்தியசாலையாக திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.
 
ஹேமாஸ் வைத்தியசாலை ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி குழுமத்தின் ஒரு அங்கத்துவ நிறுவனமாகும். ஹேமாஸ் குழுமமானது வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருட்கள், சுகாதாரம், போக்குவரத்து, பொழுதுபோக்கு மற்றும் மின் உற்பத்தி ஆகிய ஐந்து துறைகள் குறித்து கவனம் செலுத்தும் இலங்கையின் முன்னணி பெருநிறுவனங்களுள் ஒன்றாக விளங்குகிறது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .