2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

2014 - காலாண்டில் தற்காலிக ஏற்றுமதி மதிப்பு 2.80 பில்லியன் அமெரிக்க டொலர்

A.P.Mathan   / 2014 மே 13 , மு.ப. 07:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கையின் ஏற்றுமதியானது முதல் காலாண்டில், 16 சதவீத சாதகமான வளர்ச்சியை பதிவு செய்துள்ள அதேவேளை, மார்ச் மாதத்திற்கான ஏற்றுமதி 27 சத வீதமாக உயர்ந்ததுள்ளமை  வரவேற்கக்கூடியதாக இருக்கின்றது. இது 2020ஆம் ஆண்டுக்கான 20 பில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி இலக்கை நோக்கிய முயற்சிகளை ஊக்குவிக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தூர நோக்கு வெற்றிக்கான ஒரு சமிக்ஞைசையாக கருதப்படுகின்றது என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் கூறினார்.

தற்காலிக ஏற்றுமதி செயல்திறன் புள்ளி விவரங்களின் ஒப்புநோக்கு தொடர்புடைய விடயங்களை ஆராயுமுகமாக கொழும்பு 03இல் அமைந்துள்ள அமைச்சின் அலுவலகத்தில் அமைச்சர் ரிஷாத், கடந்த வெள்ளிக்கிழமை (09) அவருடைய உயர்மட்ட அதிகாரிகளுடன் நடத்திய கூட்டதிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து இவ் அதிகாரிகள் மத்தியில் பேசுகையில்,

இவ் வருட காலாண்டில் தற்காலிக ஏற்றுமதி மதிப்பு 2.80 பில்லியன் அமெரிக்க டொலரினை ஈட்டியள்ளது. 2012ஆம் ஆண்டு இலங்கையின் ஏற்றுமதி 7 சதவீத சரிவை சந்தித்த அதேவேளை, 2013ஆம் ஆண்டு அது 6.2 சதவீத ஏற்றத்தை தழுவியது.

சமீபத்திய தற்காலிக புள்ளி விபரங்களின் படி, 2013 ஒட்டுமொத்த ஏற்றுமதி வருவாய் 9773,63 மில்லியன் அமெரிக்க டொலராகவும் அது 2012ஆம் ஆண்டு ஏற்றுமதி வருமானத்தில் இருந்து 6.2 சத வீத அதிகரிப்புடன் 10379,94 மில்லியன் அமெரிக்க டொலராக காணப்பட்டது.

இலங்கையின் ஏற்றுமதித்துறையானது, 2010 மற்றும் 2011ஆம் ஆண்டுகளில் துரித வளர்ச்சியைக் கண்டதன் பின்னர், 2012ஆம் ஆண்டில் ஏற்றுமதிச் சம்பாத்தியங்களில் சிறிய வீழ்ச்சி ஏற்பட்டு பின்னடைவைக் கண்டது. உலகளாவிய சந்தைகளில் கேள்விகளில் காணப்பட்ட தடைகளும் உள்நாட்டில் வழங்கல்களில் காணப்பட்ட தடைகளும் இதற்கு ஏதுவாக அமைந்தன.

கடந்த வருடத்தில் ஏற்றுமதிகளில் காணப்பட்ட வீழ்ச்சியைக் கவனத்தில் எடுத்து, உலகளாவிய சந்தைப் போக்குகளை; எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பிலும் ஏற்றுமதித் துறையை முன்னேற்றப் பாதையில் எடுத்துச் செல்வதற்குப் பொருத்தமான உபாயங்களை உருவாக்குவது தொடர்பிலும் கருத்துக்களைப் பெறுவதற்காக கைத்தொழில், வர்த்தக அமைச்சுடனும் பிரதான ஏற்றுமதியாளர்களுடனும் ஆலோசனைக் கூட்டங்கள் நடாத்தப்பட்டது.

அதேவேளை ஏற்றுமதி அபிவிருத்திக்கும் ஊக்குவிப்புக்கும் பொறுப்பான அரசாங்க நிறுவனம் என்ற வகையில், ஏற்றுமதி அபிவிருத்தி சபையானது, இலங்கையின் ஏற்றுமதித்துறையின் அபிவிருத்திக்கு  மூன்று தசாப்தங்களாக பாரிய பங்காற்றியுள்ளது எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

தேயிலை உற்பத்தி மற்றும் மீன்பிடி துறைகளில் வழியாகவும் விவசாயம் பொருட்கள், உடைகள்,  ஏற்றுமதி பயிர்கள், தொழில்துறை உற்பத்திகள் மூலம் ஏற்றுமதிக்கு திருத்திகரமான பங்களிப்பு இருந்தது.

மேற்படி இக்கூட்டதில் ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவரும் நிறைவேற்று அதிகாரியுமான பந்துல எஹொடகொட உட்பட பல அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X