2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

2014இல் சுற்றுலாத்துறையின் வருமானம் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அமையுமாம்

A.P.Mathan   / 2014 மே 08 , மு.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

2014ஆம் ஆண்டில் இலங்கை சுற்றுலாத்துறையின் வருமானம் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அமைந்திருக்கும் எனவும், 2016ஆம் ஆண்டின் நடுப்பகுதியளவில், இலங்கையின் இரண்டாவது மிகப்பெரிய அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும் துறையாக சுற்றுலாத்துறை திகழும் எனவும் இலங்கையின் பயண முகவர்கள் சம்மேளனத்தின் தலைவர் மஹேன் காரியவசம் தெரிவித்தார்.

தற்போது இந்த துறை, இலங்கையின் அந்நியச் செலாவணியில் மூன்றாமிடத்தில் உள்ளதாகவும், 2013ஆம் ஆண்டில் முதல் தடவையாக இந்த துறை 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடந்திருந்ததாகவும் குறி்ப்பிட்டார்.

இலங்கையில் பல உலகத்தரம் வாய்ந்த ஹோட்டல்களான Shangri La, Hyatt, Ozo, Best Western, Movenpeck ஆகியன தமது செயற்பாடுகளை ஆரம்பிக்கவுள்ள நிலையில், எதிர்வரும் ஆண்டுகளில் பல உயர்ந்த மட்ட செலவீனங்களில் ஈடுபடும் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு விஜயம் செய்யக்கூடிய சூழ்நிலை திகழ்கிறது. சீனாவிற்கான விஸ்தரிப்பு நடவடிக்கைகள் கூட ஊக்குவிப்பாக அமைந்திருந்த போதிலும், உக்ரேனில் காணப்படும் அமைதியற்ற நிலையின் காரணமாக பின்னடைவு ஏற்படக்கூடும் என அறிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X