2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மஞ்சி அனுசரணையில் இராணுவ மெய்வல்லுநர் போட்டிகள்

A.P.Mathan   / 2014 ஜனவரி 08 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


சிலோன் பிஸ்கட்ஸ் நிறுவனத்தின் மஞ்சி வர்த்தகநாமம் அண்மையில் சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்ற 50ஆவது இலங்கை இராணுவ மெய்வல்லுனர் போட்டிக்கு அனுசரணை வழங்கியது. இலங்கை இராணுவத்தின் மிக முக்கிய நிகழ்வான இந்த மெய்வல்லுநர் போட்டிக்கு தொடர்ச்சியாக 6ஆவது ஆண்டாக மஞ்சி பிரதான அனுசரணை வழங்கியுள்ளது. இப் போட்டியை வருடாந்தம் ஏற்பாடு செய்யும் நோக்கில் 1950ஆம் ஆண்டு இலங்கை இராணுவ மெய்வல்லுனர் சங்கம் நிறுவப்பட்டது. இப் போட்டியில் 24 ரெஜிமென்ட்டை பிரதிநிதித்துவப்படுத்தி 1000க்கும் அதிகமான போட்டியாளர்கள் பங்குபற்றியிருந்தனர்.
 
இப் போட்டிக்கு இணையாக கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் பொதுமக்கள் பார்வைக்காக மூன்று நாள் புகைப்படக் கண்காட்சியும் நடைபெற்றது. இலங்கை இராணுவம் மற்றும் நாட்டிற்கு பெருமை சேர்த்திட்ட 170 மெய்வல்லுனர்களின் புகைப்படங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன.
 
இந்த மெய்வல்லுநர் போட்டிகளில் இலங்கை இலத்திரனியல் மற்றும் மின்னணு பொறியியல் இராணுவ படையைச்; சேர்ந்த சஜித் மதுரங்க ஈட்டியெறிதல் போட்டியில் வெற்றிபெற்று ஆண்கள் பிரிவின் மஞ்சி சவால் கிண்ணத்தையும், இலங்கை இராணுவத்தின் 7ஆவது பிரிவைச் சேர்ந்த இராணுவ வீராங்கணை யு.கே.என்.ரத்னாயக்க 1500 மீற்றர் போட்டியில் வெற்றியீட்டி பெண்கள் பிரிவின் மஞ்சி சவால் கிண்ணத்தையும் வென்றெடுத்தனர்.
 
சிலோன் பிஸ்கட்ஸ் நிறுவனத்தின் குழும பணிப்பாளரும், சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை பிரிவின் தலைவருமான நந்தன விக்ரமகே சிறந்த ஆண், பெண் மெய்வல்லுநருக்கான மஞ்சி சவால் கிண்ணங்களை வெற்றியாளர்களிடம் கையளித்தார். இந்த பரிசளிப்பு நிகழ்வு பிரதம விருந்தினர் கௌரவ பிரதமர் டி.எம்.ஜயரத்ன அவர்களின் தலைமையில் நடைபெற்றதுடன், இந் நிகழ்வில்; மேஜர் ஜெனரல் தயா ரத்னாயக்கவும் பங்குபற்றியிருந்தார்.
 
இலங்கை இராணுவப் படையினரை தேசிய மட்டத்திற்கு உயர்த்துவதே இந்த போட்டியின் முக்கிய நோக்கமாகும் என மேஜர் ஜெனரல் தயா ரத்னாயக்க தெரிவித்தார். மேலும் அவர் இந்த போட்டிக்கு தொடர்ச்சியாக 6ஆவது ஆண்டாக மஞ்சி அனுசரணை வழங்குவதையிட்டு தமது நன்றியை தெரிவித்ததுடன், இலங்கையின் தேசிய மட்ட விளையாட்டு போட்டிகளுக்கு அனுசரணை வழங்குவதில் மஞ்சி என்றும் முன்னிலையில் திகழ்கிறது என தெரிவித்தார்.
 
சர்வதேச போட்டிகளில் பங்கேற்று இலங்கைக்கு பெருமை சேர்த்த சமிந்த விஜேகோன், பிரசன்ன அமரசேகர, நதீகா லக்மாலி, எம்.சி.தில்ருக்ஷி, ரோஹித புஷ்பகுமார, யு.எஸ்.சுரேந்திர, எஸ்.எம்.சப்ரான், பி.எச்.ஷமல், சஜித் மதுரங்க, என்.பி.குணதிலக போன்ற 11 மெய்வல்லுநர்கள் இப் போட்டியில பங்குபற்றியிருந்தனர். முதல் நாள் போட்டிகளின் போது ஈட்டி எறிதல் போட்டியில் தேசிய சம்பியன் நதீகா லக்மாலி 57.57 மீற்றர் பதிவு செய்து புதிய சாதனையை நிகழ்த்தினார். மேலும் இவர் இந்த போட்டியின் சிறந்த ஒட்;டுமொத்த மெய்வல்லுநர் விருதினை வென்றெடுத்தார். மேலும் பெண்கள் பிரிவில் ஏழு சாதனைகள் மற்றும் ஆண்கள் பிரிவில் இரு சாதனை உள்ளடங்கலாக மொத்தமாக ஒன்பது புதிய சாதனைகள் பதிவு செய்யப்பட்டன.
 
இந்த அனுசரணை குறித்து சிலோன் பிஸ்கட்ஸ் நிறுவனத்தின் குழும பணிப்பாளரும், சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை பிரிவின் தலைவருமான நந்தன விக்ரமகே கருத்து தெரிவிக்கையில், 'தமது வியாபார இலக்குகளை தாண்டி போர் வீரர்களின் திறமைகளை மேம்படுத்துவதற்கு உள்நாட்டு கம்பனியால் வழங்கப்படும் பெருநிறுவன சமூக பங்களிப்பாக இப்போட்டியை கருத முடியும். மனிதாபிமான நடவடிக்கைகளின் பின்னர் இராணுவம் மீது அதிக கவனம் செலுத்தப்படுகிறது. இருப்பினும் எமது நாட்டிற்;காக அயராது உழைத்த போர் வீரர்களுக்கான ஆதரவு மற்றும் அனுசரணையை விரிவுபடுத்துவதற்கான முக்கியத்துவத்தை சிபிஎல் நிறுவனம் நன்குணர்ந்துள்ளது. இதன் காரணமாகவே மஞ்சி தொடர்ந்து 6ஆவது ஆண்டாக இப்போட்டிக்கு அனுசரணை வழங்கியுள்ளது' என்றார்.
 
இலங்கையின் விளையாட்டு துறையை அபிவிருத்தி செய்யும் நோக்கில், தமது சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் ஓர் அங்கமாக கைப்பந்து, தடகளம் மற்றும் கிரிக்கெட் போன்ற பல்வேறு போட்டிகளுக்கு மஞ்சி அனுசரணை வழங்கி வருகிறது. அண்மையில் நடைபெற்ற SLIM சிறந்த வர்த்தகநாம விருது வழங்கல் 2013 இல் ஆண்டிற்கான சிறந்த CSR வர்த்தகநாமத்திற்கான தங்க விருதினை மஞ்சி வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .