2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

சிறு கைத்தொழில் பேட்டைக்கான அடிக்கல் நடல்

Super User   / 2014 ஜனவரி 20 , பி.ப. 01:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


கிழக்கு மாகாணத்தின் முதலாவது சிறு கைத்தொழில் பேட்டைக்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை ஏறாவூர், ஐயங்கேணியில்இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் நஸீர் அஹமட், வெளிநாட்டு முதலீட்டாளர்களும் தொழிலதிபர்களும் சிறு கைத்தொழில் உற்பத்தியாளர்களும் கலந்துகொண்டனர்.

நெசவு, தும்புக் கைத்தொழில், மட்பாண்டம், தையல், உணவு உற்பத்தி, முந்திரிப் பருப்பு ஏற்றுமதி உற்பத்தி, பன்பாய் உள்ளிட்ட 11 வகையான உற்பத்திகளுக்கான கைத்தொழில் பேட்டை மையமாக இது அமையவுள்ளது என மாகாண அமைச்சர் நஸீர் அஹமட் கூறினார்.

சுமார் 40 இலட்ச ரூபாய் செலவில் இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ள கைத்தொழில் பேட்டைக் கட்டிடத் தொகுதியின் நிர்மாண பணிகள் இந்த வருட இறுதியில் நிறைவடையும் என அவர் மேலும் தெரிவித்தார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .