2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

இலங்கையில் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு பங்களிப்பு வழங்குவது குறித்து மகிழ்ச்சி: வென்கை சாங்க்

A.P.Mathan   / 2014 ஜனவரி 22 , மு.ப. 09:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த ஆசிய அபிவிருத்தி வங்கியின் உப தலைவர் வென்கை சாங்க், இலங்கையில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவிகளுடன் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்களை நேரில் பார்வையிட்டிருந்தார்.
 
தெற்கு அதிவேக நெடுஞ்சாலை, கொழும்பு துறைமுகம் மற்றும் காலி மாவட்டத்தில் பாடசாலை ஒன்று என ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவிகளுடன் இலங்கையில் பல்வேறு அபிவிருத்தி செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த அபிவிருத்தி செயற்பாடுகளை நேரில் பார்வையிட்டதை தொடர்ந்து, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ உள்ளடங்கிய முக்கிய பொருளாதார அரச அதிகாரிகளுடன் சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தார்.
 
இந்த சந்திப்பில், இலங்கையின் அபிவிருத்தி செயற்பாடுகளில் ஆசிய அபிவிருத்தி வங்கி தனது பங்களிப்புகளை வழங்குவது மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக அமைந்துள்ளது என ஆசிய அபிவிருத்தி வங்கியின் உப தலைவர் வென்கை சாங்க் தெரிவித்திருந்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .