2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

இறக்குமதி அதிகரிப்பை தொடர்ந்து ரூபாவின் பெறுமதி சரிவு

A.P.Mathan   / 2014 ஜனவரி 22 , மு.ப. 09:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

திங்கட்கிழமை நாணயமாற்று வீதங்களின் அடிப்படையில் ரூபாவின் பெறுமதி சற்று வீழ்ச்சியடைந்திருந்தது. இறக்குமதியாளர்களின் செயற்பாடுகளின் அதிகளவில் காணப்பட்டமையால் ரூபாவின் பெறுமதியில் சரிவு பதிவாகியிருந்ததாக நாணய மாற்று முகவர்கள் கருத்து வெளியிட்டிருந்தனர்.
 
இதேவேளை, அண்மையில் அரசாங்கத்தின் மூலம் வழங்கப்பட்டிருந்த சவரின் பிணை விற்பனையின் மூலம் பெறப்பட்ட 1 பில்லியன் டொலர்களை இருப்பில் பேணுவது எனும் அரசாங்கத்தின் நிலைப்பாடும் ரூபாவின் பெறுமதியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என நிபுணர்கள் கருத்து வெளியிட்டிருந்தனர்.
 
டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி நேற்றைய தினம் 130.75/77 ரூபாவாக பதிவாகியிருந்தது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .