2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

மட்டக்களப்பில் டயலொக் வாடிக்கையாளர் சேவை கிளை நிலையம் திறப்பு

Kogilavani   / 2014 ஜனவரி 27 , மு.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்


டயலொக் வாடிக்கையாளர் சேவை கிளை நிலையம் மட்டக்களப்பு இல: 262 திருமலை வீதி தாண்டவன்வெளியில் திங்கட்கிழமை (27) திறந்து வைக்கப்பட்டது.

இந்நிலையத்தினை, பிராந்திய வாடிக்கையாளர் சிரேஷ்ட முகாமையாளர் ஹேமக பாலசூரிய நாடா வெட்டி உத்தியோகப்பூர்வமாக திறந்து வைத்தார்.

இத்னபோது, நான்கு மதத் தலைவர்களுக்கு டயலொக் குடைகள் வழங்கி வைக்கப்பட்டன.

அலுவலக முகாமையாளர் ஆந்திரே பெனடிக் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் விற்பனை மற்றும் விநியோக பிராந்திய முகாமையாளர் மங்கல் அத்தபத்து, பிராந்திய இயக்க முகாமையாளர் கவின் ரொட்டிக்கோ, வாடிக்கையாளர் இயக்க முகாமையாளர் டினார வகவத்த மற்றும் உதவி பிராந்திய முகாமையாளர் டிலோன் சுமித் ஆகியோர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .