2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

சமூக பொறுப்புணர்வு திட்டத்துடன் புது வருடத்தை ஆரம்பித்துள்ள பீபிள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் பிஎல்சி

A.P.Mathan   / 2014 ஜனவரி 27 , மு.ப. 07:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கையில் வங்கியியல் துறையைச் சாராத சந்தையின் முன்னோடி நிதிசார் நிறுவனமாக திகழும் பீபிள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் பிஎல்சி நிறுவனம், 2014 ஆம் ஆண்டை சமூக பொறுப்புணர்வு செயற்திட்டம் ஒன்றுடன் ஆரம்பித்திருந்தது.
 
இந்நிறுவனம் இலங்கையின் சிவில் பாதுகாப்பு திணைக்களத்துக்கு இரண்டு டிப்பர் ரக வாகனங்களை அன்பளிப்பாக கையளித்திருந்தது. இந்த வாகனங்களை கையளித்திருந்ததன் நோக்கம், ஆலயங்களை புனருத்தாரணம் செய்யும் நடவடிக்கைகள் மற்றும் வெவ்வேறு பிரிவுகளில் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு உதவும் வகையில் அமைந்திருந்தது. 2014 ஜனவரி 1ஆம் திகதி பீபிள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் பிஎல்சி நிறுவனத்தின் தலைமையகத்தில் இடம்பெற்ற வைபவமொன்றில், மக்கள் வங்கி மற்றும் பீபிள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் நிறுவனத்தின் தலைவர் காமினி எஸ்.செனரத் குறித்த இரு வாகனங்களையும் உத்தியோகபூர்வமாக சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் றியர் அட்மிரல் ஆனந்த பீரிஸ் அவர்களிடம் கையளித்திருந்தார்.
 
இந்த நிகழ்வில் பீபிள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் பிஎல்சி நிறுவனத்தின் பணிப்பாளர்களான பி.குடாபாலகே, அனுர சந்திரசிறி, வசந்த குமார், பிரதம நிறைவேற்று அதிகாரிஃபொது முகாமையாளர் டி.பி.குமாரகே, உதவி பொது முகாமையாளர்கள் மற்றும் தலைமையகத்தின் ஊழியர்களும் பங்குபற்றியிருந்தனர். 
 
பீபிள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் பிஎல்சி குழுமத்தின் மூலம் வழங்கப்படும் நிதிசார் சேவைகளில், லீசிங், வாடகை கொள்வனவு, நிலையான வைப்புகள், சேமிப்பு கணக்குகள், கடன் வசதிகள், காப்புறுதி, நுண் நிதியியல், ஃபிலீட் முகாமைத்துவ தீர்வுகள் மற்றும் இஸ்லாமிய நிதிசார் சேவைகள் போன்றன உள்ளடங்கியுள்ளன. 
 
குறித்த கம்பனியின் விசேடத்துவமாக, வாடிக்கையாளர்களின் சகல விதமான நிதிசார் தேவைகளையும் கவர்ச்சிகரமான விலையில் உயர் தரம் வாய்ந்த சேவைகளுடன் ஒரே கூரையின் கீழ் பூர்த்தி செய்யக்கூடியமை அமைந்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .