2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

சுவதேஷி கொஹோம்ப தேகி நெவக்

A.P.Mathan   / 2014 ஜனவரி 27 , மு.ப. 09:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கையில் மூலிகை பிரத்தியேக பராமரிப்பு தயாரிப்புகளை உற்பத்தி செய்து விநியோகிப்பதில் முன்னோடியாக திகழும் சுவதேஷி இன்டஸ்ரியல் வேர்க்ஸ் பிஎல்சி, தனது வாடிக்கையாளர்களை கௌரவிக்கும் வகையில், 'சுவதேஷி கொஹோம்ப தேகி நெவக்' எனும் ஊக்குவிப்பு திட்டமொன்றை முன்னெடுத்திருந்தது. இந்த திட்டத்தின் ஊடாக கொஹோம்ப ஹேர்பல் சவர்க்கார பாவனையாளர்களுக்கு வீட்டுப்பாவனைப் பொருட்கள் மற்றும் அன்பளிப்புகளை வெற்றிகொள்வதற்கான வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருந்தது.
 
இந்த திட்டத்தின் முதலாவது பரிசான கெலக்சி ஸ்கூட்டர், அநுராதபுரம், சாலியபுர பகுதியைச் சேர்ந்த செல்வி. ரசிகா சஞ்ஜீவனிக்கு கையளிக்கப்பட்டிருந்தது. 
 
'சுவதேஷி கொஹோம்ப' மூலிகை தயாரிப்புகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களை கௌரவிக்கும் வகையிலும், சுவதேஷி நிறுவனத்தின் எழுபது ஆண்டுகள் பூர்த்தியை கொண்டாடும் வகையிலும் இந்த ஊக்குவிப்பு திட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
 
மாதாந்த வெற்றியாளர்களுக்கு குளிரூட்டிகள், சலவை இயந்திரங்கள், தையல் இயந்திரங்கள் மற்றும் DVD பிளேயர்கள் போன்றன அன்பளிப்புகளாக வழங்கப்பட்டிருந்தன. கலெக்சி ஸ்கூட்டர் மற்றும் மடிக்கணனிகள் போன்றன 2013 டிசம்பர் மாதம் இடம்பெற்ற மாபெரும் இறுதிப்பரிசிழுப்பின் போது வழங்கப்பட்டிருந்தன.
 
முதலாவது பரிசின் வெற்றியாளரான ரசிகா சஞ்ஜீவனி கருத்து வெளியிடுகையில், 'எனக்கு இந்த பரிசு மிகவும் விசேஷமானதாக அமைந்துள்ளது. நான் சுவதேஷி கொஹோம்ப தயாரிப்புகளை இளம் பராயம் முதல் பயன்படுத்தி வருகிறேன். எனவே, இந்த பரிசுடன் ஆழமான உணர்வுகள் எனக்கு பின்னிப்பிணைந்துள்ளன. கொஹோம்ப தயாரிப்புகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கான கௌரவிப்பாக இது அமைந்துள்ளது. எனவே, அனைவரையும் கொஹோம்ப தயாரிப்புகளை பயன்படுத்துமாறு நான் அனைவரையும் அழைக்கிறேன்' என்றார்.
 
சுவதேஷி நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், 'பல தசாப்த காலமாக சுவதேஷி கொஹோம்ப தயாரிப்புகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களை கௌரவிக்கும் வகையில் நாம் 'சுவதேஷி கொஹோம்ப தேகி நெவக்' ஊக்குவிப்பு திட்டத்தை அறிமுகம் செய்ய தீர்மானித்தோம்' என்றார்.
 
இலங்கையில் மூலிகை பிரத்தியேக பராமரிப்பு தயாரிப்புகளை உற்பத்தி செய்வதில் சுவதேஷி முன்னோடியாக திகழ்கின்றது. இலங்கையில் உற்பத்தி செய்யப்பட்ட முதலாவது ஹேர்பல் சவர்க்காரம் எனும் பெருமையை தன்னகத்தே கொண்டுள்ளது. ஏழு தசாப்த காலமாக மூலிகை துறையில் முன்னணி நாமத்தை கொஹோம்ப கொண்டுள்ளது. இந்த சாதனையை வேறெந்த உள்நாட்டு தயாரிப்பின் மூலமாகவும் முறியடிக்க முடியாது. 
 
'எமது முதலாவது பரிசை வெற்றி பெற்றவர், எமது நீண்ட கால பாவனையாளர் என்பதை அறிந்து கொண்டமை மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது' என கம்பனி பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

1941ஆம் ஆண்டு கந்தானையில் தாபிக்கப்பட்டு ஆரம்பமான சுவதேஷி நிறுவனம், இந்நாட்டு வளங்களை பேணிப்பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அர்ப்பணித்தது. இந்நிறுவனத்தின் தயாரிப்புகளில் சேஃப்பிளஸ், கொஹோம்ப ஆயுர்வேத சோப், கொஹோம்ப பேபி, ராணி சந்தன சோப், அப்சரா வெனிவெல், பர்ல்வயிட், லக்பார் ஆடை சவர்க்காரம், பிளாக் ஈகள் பர்ஃவியும் மற்றும் சுவதேஷி ஷவர் ஜெல் ஆகியன சந்தையில் பிரபல்யமடைந்துள்ளன. சுவதேஷி நிறுவனத்தினால் அண்மையில் சிறுவர்களுக்கான 'லிட்டில் ப்ரின்சஸ்' ஷவர் ஜெல் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனம் தனது தயாரிப்புகளை சர்வதேச தரச் சான்றிதழான ஐளுழு 9001:2008 க்கு அமைவாக மேற்கொள்கின்றமை விசேட அம்சமாகும். 
 
சுவதேஷி கொஹோம்ப ஹேர்பல் சவர்க்காரத்தில் இயற்கையான வேப்பஞ்சாற்றை கொண்டுள்ளது. இது சருமத்துக்கு மிருதுவானதாக அமைந்திருப்பதுடன், ஆழமாக சுத்தம் செய்து, சருமத்தின் இயற்கை அழகை மேம்படுத்துவதாக அமைந்துள்ளது. சருமத்தை கிருமிகளிலிருந்து பாதுகாக்கிறது. கொஹோம்ப தயாரிப்புகளில் ஹேர்பல் பியுட்டி சோப், ஹேர்பல் ட்ரான்ஸ்பேரன்ட் சோப், ஹேர்பல் பேபி ரேன்ஜ், ஹேர்பல் ஷாம்பு, ஹேர்பல் ஃபேஷியல் வொஷ் மற்றும் ஹேர்பல் பவுடர் ஆகியன உள்ளடங்கியுள்ளன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .