2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

ஹட்ச் நிறுவனத்தை கொள்வனவு செய்ய மொபிடெல் திட்டம்

A.P.Mathan   / 2014 ஜனவரி 28 , மு.ப. 09:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீலங்கா டெலிகொம், நேற்று கொழும்பு பங்குச்சந்தையில் வெளியிட்டிருந்த அறிக்கைக்கு அமைவாக, தனது அங்கத்துவ நிறுவனமான மொபிடெல், ஹட்ச் நிறுவனத்தை கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்ட வண்ணமுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
 
இந்த நடவடிக்கைகள் தற்போது ஆரம்ப கட்டத்தில் காணப்படுவதாகவும், இது குறித்து இரு தரப்பினராலும் ஏதேனும் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும் பட்சத்தில் அது தொடர்பில் தனது பங்குதாரர்களுக்கு முறைப்படி அறிவிக்கப்படும் என ஸ்ரீலங்கா டெலிகொம் அறிவித்துள்ளது. 
 
ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் 100 வீத அங்கத்துவ நிறுவனம் மொபிடெல் என்பது குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .