2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

வெளிநாட்டவர்கள் எச்என்பி பங்குகள் மீது அதிகளவு நாட்டம்

A.P.Mathan   / 2014 ஜனவரி 30 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

வளர்ந்து வரும் ஏனைய பங்குச்சந்தைகள் பெருமளவு சரிவுகளை எதிர்நோக்கியிருந்த போதிலும், கொழும்பு பங்குச்சந்தையில் எச்என்பி பங்குகள் மீது அதிகளவு கேள்வி காணப்பட்டதை அவதானிக்க முடிந்தது. குறிப்பாக வெளிநாட்டவர்கள் 318 மில்லியன் ரூபா பெறுமதியான பங்குகளை கொள்வனவு செய்திருந்தனர்.
 
நேற்றைய தினம் பங்கு கொடுக்கல் வாங்கல்களின் போது மொத்தப்புரள்வு பெறுமதியில் சிலோன் டொபாக்கோ கம்பனி, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் கொமர்ஷல் வங்கி பங்குகளும் அதிகளவு பங்களிப்பை வழங்கியிருந்தன. 
 
ஆசிய பிராந்தியத்தின் ஏனைய பங்குச்சந்தைகளுடன் ஒப்பிடுகையில் கொழும்பு பங்குச்சந்தை உறுதியான பெறுமதியான பதிவு செய்திருந்தது. இந்த நிலை தொடர்ந்தும் காணப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது என என்டிபி ஸ்ரொக்புரோக்கர்ஸ் அறிவித்திருந்தது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .