2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

அதிவேக நெடுஞ்சாலைகளுக்கான கட்டணம் விரைவில் அதிகரிப்பு?

A.P.Mathan   / 2014 ஜனவரி 31 , மு.ப. 07:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிப்பதற்கு அறவிடப்படும் கட்டணத்தில் வெகுவிரைவில் அதிகரிப்பு மேற்கொள்ளப்படும் என திறைசேரிகளின் செயலாளர் பி.பி. ஜயசுந்தர தெரிவித்தார். தற்போது அதிவேக நெடுஞ்சாலைகளை பயன்படுத்துவதற்கான பயணிகளின் மூலம் செலுத்தப்படும் கட்டணம் போதுமானதாக இல்லை எனவும், இவற்றை நிர்மாணிப்பதற்கும், பராமரிப்பதற்கும் ஏற்படும் செலவை விரைவில் மீள பெற்றுக்கொள்ளும் வகையில் இந்த கட்டணங்களில் மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளது என அவர் குறிப்பிட்டார்.
 
தற்போது கொழும்பு - காலி அதிவேக நெடுஞ்சாலையில் ஒரு வழி பயணத்துக்கு கார் ஒன்றுக்கு தலா 400 ரூபாவும், கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் ஒரு வழி பயணத்துக்கு கார் ஒன்றுக்கு தலா 300 ரூபாவும் அறவிடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .