2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

களனி கேபிள்ஸ் பிஎல்சி ஏற்பாடு செய்யும் 'களனி சவிய'

A.P.Mathan   / 2014 ஜனவரி 31 , பி.ப. 02:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


பாதுகாப்பான இலத்திரனியல் மற்றும் தொடர்பாடல்கள் கேபிள்களை விநியோகிக்கும் தேசத்தின் முதல் தர வர்த்தக நாமமான களனி கேபிள்ஸ் பிஎல்சி தனது மற்றுமொரு சமூக பொறுப்புணர்வு செயற்திட்டமாக 'களனி சவிய' எனும் செயற்தி;ட்டத்தை பேராதனை பல்கலை;கழகத்தின் பொறியியல் பீடத்துடன் இணைந்து கடந்த ஆறு வருடங்களாக முன்னெடுத்து வருகிறது. இந்த செயற்திட்டம் உள்நாட்டு பல்கலைக்கழகங்களுக்கும் விஸ்தரிக்கப்பட்டு 2014 ஆம் ஆண்டிலும் முன்னெடுக்கப்படவுள்ளது.
 
களனி கேபிள்ஸ் பிஎல்சியின் பிரதம நிறைவேற்று அதிகாரி மஹிந்த சரணபால கலதாரி ஹோட்டலில் இடம்பெற்ற சான்றிதழ்கள் கையளிக்கும் நிகழ்வில் இந்த திட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படவுள்ளமை தொடர்பில் அறிவித்திருந்தார். இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக பேராதனை பல்கலைக்கழகத்தின் உதவி பீடாதிபதி பேராசிரியர். அத்துல சேனாரத்ன கலந்து கொண்டிருந்தார்.
 
களனி கேபிள்ஸ் பிஎல்சியின் பிரதம நிறைவேற்று அதிகாரி மஹிந்த சரணபால கருத்து தெரிவிக்கையில், '2007ஆம் ஆண்டு 'களனி சவிய' எனும் சமூக பொறுப்புணர்வு திட்டம் பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்துடன் இணைந்து ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இந்த திட்டத்தின் நோக்கம், ஒரு வருட பயிற்சி திட்டத்தின் மூலமாக இலத்திரனியல் தொழில்நுட்ப வல்லுநர்களை தயார்ப்படுத்துவதாக அமைந்திருந்தது. இந்த திட்டம் இளைஞர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது' என்றார்.
 
ஆரம்ப நிலையிலுள்ளவர்களும், பாடசாலை கல்வியை பூர்த்தி செய்த மாணவர்களும் சுய தொழிலை முன்னெடுக்க ஆர்வமாக உள்ளநிலையில், 'களனி சவிய' இலத்திரனியல் பயிற்சி திட்டம் தொடர்பாக அதிகளவு ஆர்வம் செலுத்தி வருகின்றனர். நாம் ஏற்கனவே 200க்கும் அதிகமான ஆளுமை படைத்தவர்களை இந்த திட்டத்தினூடாக தயார்ப்படுத்தியுள்ளோம்.
 
'நூறு வீதம் இலங்கையின் கம்பனி எனும் வகையில், கடந்த நான்கு தசாப்த காலமாக இலத்திரனியல் மற்றும் தொடர்பாடல் கேபிள்களை உற்பத்தி செய்யும் நிறுவனம் எனும் வகையில், இந்த திட்டத்தினூடாக பெரும்பாலான பயிற்சி பெற்ற இளைஞர்கள் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளை பெற்றுள்ளதுடன், தமது வாழ்க்கையில் உறுதியான நிலையை எய்தியுள்ளனர்' என அவர் மேலும் குறிப்பிட்டார்.
 
இந்த பயிற்சி திட்டத்தை முன்னெடுப்பதற்கு எமக்கு ஒத்துழைப்பு வழங்கிய பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்துக்கு நாம் எமது நன்றிகளை வெளிப்படுத்துகிறோம். 'களனி சவிய' என்பது சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட சான்றிதழை வழங்கும் ஒரே பயிற்சி திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. க.பொ.த சாதாரண தர பெறுபேறுகளுடன் இந்த பயிற்சிக்காக விண்ணப்பிக்க முடியும்.
 
'களனி சவிய' சேவைகளை வடக்கு கிழக்கு உள்ளடங்கலாக தேசத்தின் ஏனைய பகுதிகளுக்கும் விஸ்தரிப்பதற்கு நாம் திட்டமிட்டுள்ளோம். எனவே நாம் அனைத்து பல்கலைக்கழகங்களையும் இந்த திட்டத்துடன் கைகோர்க்குமாறு அழைக்கிறோம்' என பிரதம நிறைவேற்று அதிகாரி மேலும் குறிப்பிட்டார்.
 
பேராதனை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜே.பி.ஏக்கநாயக்க அவர்களின் சிந்தனை வெளிப்பாடாக களனி சவிய தோற்றம் பெற்றது. சுயதொழில் செயற்பாடுகளில் ஈடுபடும் இலத்திரனியல் தொழில்நுட்பவியலாளர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் வகையில் களனி சவிய திட்டம் அமைந்துள்ளது.
 
தனியார் நிறுவனம் ஒன்றுடன் உள்நாட்டு பல்கலைக்கழகம் ஒன்று இணைந்து முன்னெடுக்கும் முதலாவது பயிற்சி திட்டமாக இது அமைந்துள்ளது.
 
களனி கேபிள்ஸ் என்பது 100 வீதம் இலங்கையை சேர்ந்த கம்பனியாகும். சுமார் 44 வருட காலமாக இலத்திரனியல் மற்றும் தொடர்பாடல் கேபிள்களை உற்பத்தி செய்வதில் இந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது. அண்மையில் நிறைவடைந்த SLIM வர்த்தக நாம சிறப்பு விருதுகள் 2012 இல், களனி கேபிள்ஸ் பிஎல்சி நிறுவனத்துக்கு சிறந்த வர்த்தக நாமத்துக்கான வெண்கல விருது வழங்கப்பட்டிருந்தது. களனி கேபிள்ஸ் நிறுவனத்துக்கு தரச்சிறப்புக்கான ISO 9000:2008 சான்று, சிறந்த சூழல் முகாமைத்துவத்துக்கான ISO 14001:2004 தரச்சான்றும் வழங்கப்பட்டுள்ளன. தய்கி அகிமொடோ 5ளு விருதுகளின் தங்க விருதும் களனி கேபிள்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இலத்திரனியல் மற்றும் தொலைத்தொடர்பாடல்கள் துறையில் 'சுப்பர் பிராண்ட்ஸ்' தர விருதையும் 2008ஆம் ஆண்டில் களனி கேபிள்ஸ் பெற்றுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .