2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

பங்குச்சந்தை; ரூபாவின் பெறுமதி சரிவு

A.P.Mathan   / 2014 பெப்ரவரி 19 , மு.ப. 07:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு பங்குச்சந்தையின் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்ச்சியான நான்காவது நாளாக மறை பெறுமதியை பதிவு செய்திருந்தது. நேற்றைய தின கொடுக்கல் - வாங்கல்கள் நிறைவடையும் போது, ஆறு வாரத்தில் பதிவாகியிருந்த குறைந்த பெறுமதிகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.

அனைத்து பங்கு விலைச்சுட்டெண் 6021.66 புள்ளிகளையும், S&P SL 20 சுட்டெண் 3288.04 புள்ளிகளையும் பதிவு செய்திருந்தது. சிலோன் டொபாக்கோ மற்றும் டிஸ்டிலரீஸ் பங்குகள் இதில் அதிக பங்களிப்பை செய்திருந்தன. மொத்தப்புரள்வு பெறுமதி 500 மில்லியன் ரூபாவை விட அதிகமாக பதிவாகியிருந்தது. இதில் டயலொக் ஆக்சியாடா மற்றும் நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி பங்குகளை வெளிநாட்டவர்கள் விற்பனை செய்திருந்தமை பங்களிப்பை செலுத்தியிருந்தன. ஸ்ரீலங்கா டெலிகொம் பங்குகளும் கவனத்தை ஈர்த்திருந்தன. ஜோன் கீல்ஸ் வொரன்ட்கள் 23 பங்குகள் மீது சிறியளவிலான முதலீட்டாளர்கள் ஆர்வம் செலுத்தியிருந்தனர்.

தொலைத்தொடர்பாடல் துறை மொத்தப்புரள்வு பெறுமதியில் அதிகளவு பங்களிப்பை செலுத்தியிருந்தது (டயலொக் ஆக்சியாடா மற்றும் ஸ்ரீலங்கா டெலிகொம் ஆகிய பங்குகளின் பங்களிப்புடன்) துறையின் சுட்டெண் 0.23% சரிவை பதிவு செய்திருந்தன. டயலொக் ஆக்சியாடா பங்கொன்றின் விலை மாற்றமின்றி 9.20 ரூபாவாக பதிவாகியிருந்தது. வெளிநாட்டு உரிமையாண்மை 19,600,000 பங்குகளால் சரிவடைந்திருந்தது. ஸ்ரீலங்கா டெலிகொம் பங்கொன்றின் விலை 0.20 ரூபாவால் (0.47%) சரிவடைந்து 42.80 ரூபாவாக பதிவாகியிருந்தது.

வங்கி, நிதியியல் மற்றும் காப்புறுதி துறை மொத்தப்புரள்வு பெறுமதியில் இரண்டாவதாக அதிகளவு பங்களிப்பை செலுத்தியிருந்தது (நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி மற்றும் செலான் வங்கி வாக்குரிமையற்ற பங்குகள் ஆகியவற்றின் பங்களிப்புடன்) துறையின் சுட்டெண் 0.20% சரிவை பதிவு செய்திருந்தது. நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி பங்கொன்றின் விலை 0.30 ரூபாவால் (0.45%) சரிவடைந்து 65.70 ரூபாவாக பதிவாகியிருந்தது. வெளிநாட்டு உரிமையாண்மை 1,168,424 பங்குகளால் சரிவடைந்திருந்தது. செலான் வங்கி வாக்குரிமையற்ற பங்கொன்றின் விலை 0.30 ரூபாவால் (0.88%) உயர்ந்து 34.30 ரூபாவாக பதிவாகியிருந்தது.

ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் வொரன்ட்கள் 23 பங்குகளும் மொத்தப்புரள்வு பெறுமதியில் பங்களிப்பை வழங்கியிருந்தன பங்கொன்றின் பெறுமதி 1.50 ரூபாவால் (2.42%) குறைந்து 60.50 ரூபாவாக பதிவாகியிருந்தது.

இதேவேளை தலவாக்கலை டீ எஸ்டேட்ஸ் தனது முதலாவதும் இறுதியானதுமான பங்கிலாபத்தை, பங்கொன்றுக்கு 3.00 ரூபா வீதம் அறிவித்திருந்தது. டயலொக் ஆக்சியாடா தனது இறுதி பங்கிலாபத்தை பங்கொன்றுக்கு 0.29 ரூபா வீதம் அறிவித்திருந்தது.

நேற்றைய தினம் நாணய மாற்று விகித நிலைவரங்களின் படி அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி 130.85-87 ரூபாவாக பதிவாகியிருந்தது. இறக்குமதியாளர்கள் அதிகளவு டொலர் கேள்வியை கொண்டிருந்தமை காரணமாக, ரூபாவின் பெறுமதி சரிவடைந்து காணப்பட்டதாக நாணயமாற்று முகவர்கள் அறிவித்திருந்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .