2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

கம்பஹா மற்றும் அவிசாவளை பகுதிகளில் சென்ரல் இன்டஸ்ரிஸ் பிஎல்சியின் விநியோகத்தர்கள் நியமனம்

A.P.Mathan   / 2014 பெப்ரவரி 19 , பி.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


நாடு முழுவதும் அங்கீகாரம் பெற்ற முகவர்களை நியமிக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்து வரும் சென்ரல் இன்டஸ்ரிஸ் பிஎல்சி நிறுவனம், தனது விநியோக வலையமைப்பை மேலும் விஸ்தரிக்கும் வகையில், கம்பஹா மற்றும் அவிசாவளை ஆகிய பகுதியில் புதிய அங்கீகாரம் பெற்ற முகவர்களை நியமித்துள்ளது. தனது உயர் ரகம் வாய்ந்த தயாரிப்பான நஷனல் PVC நீர் குழாய்கள் மற்றும் பொருத்திகள் ஆகியவற்றை விநியோகிக்கும் வகையில் இந்த நியமனத்தை வழங்கியுள்ளது. இந்த பகுதிகளில் பாரியளவில் நிர்மாணப்பணிகள் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

புதிய விநியோகத்தர்களாக, உடுகம்பொல அருண டிரேடர்ஸ் (நய்வெல வீதி, பெதியகொட, கம்பஹா) மற்றும் அவிசாவளை நேச்சர்ஸ் ஹொபியிஸ்ட் ஆகிய நிறுவனங்கள் நஷனல் PVC தயாரிப்புகளுக்கு அதிகரித்துச் செல்லும் கேள்வியை நிவர்த்தி செய்யும் வகையில் செயற்படவுள்ளன.

வீடுகளை அமைக்கும் தனிநபர்கள் மற்றும் நிர்மாணப்பணிகளை முன்னெடுக்கும் நிறுவனங்கள் ஆகியன நஷனல் PVC தயாரிப்புகளில் அதிகளவு நம்பிக்கை கொண்டுள்ளன. எனவே இந்த புதிய விநியோகத்தர்கள் நியமனத்தின் மூலம் சென்ரல் இன்டஸ்ரிஸ் தாபனத்துக்கு, கம்பஹா மற்றும் அவிசாவளை பகுதிகளைச் சேர்ந்த ஹார்ட்வெயார் முகவர்களுக்கு இலகுவான முறையில் பொருட்களை விநியோகிக்கக்கூடிய வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த இரு விநியோகத்தர் விற்பனையகங்களின் அங்குரார்ப்பண நிகழ்வு வைபவ ரீதியாக இடம்பெற்றிருந்ததுடன், சென்ரல் இன்டஸ்ரிஸ் நிறுவனத்தின் பொது முகாமையாளர் பிரியந்த அபேகோன் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தார். கடந்த ஆண்டுகளில் கம்பனியின் தயாரிப்புகளுக்கான கேள்வி பன்மடங்கு அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

'தற்போது பல நிர்மாணத்திட்டங்கள் கம்பஹா மற்றும் அவிசாவளை ஆகிய பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட வண்ணமுள்ளன. எனவே, எமது வாடிக்கையாளர்களின் நஷனல் PVC நீர் குழாய்கள் மற்றும் பொருத்திகள் தேவைகளை நிவர்த்தி செய்வது என்பது எமது பொறுப்பாக அமைந்துள்ளது. எனவே நாம், எமது அங்கீகாரம் பெற்ற இரு முகவர் நிறுவனங்களை நாம் நிறுவியுள்ளோம். இவர்கள் இந்த பகுதியில் மிகவும் பரீட்சியமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது' என அபேகோன் தெரிவித்திருந்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், 'அனைத்து மாவட்டங்களிலும் விநியோகத்தர்களை நியமிக்கும் செயற்பாடுகளை நாம் முன்னெடுத்து வருகிறோம். இந்த செயற்திட்டத்தின் ஒரே நோக்கம், சென்ரல் இன்டஸ்ரிஸ் பிஎல்சி தயாரிப்புகளின் மீது அதிகளவு நம்பிக்கை கொண்டுள்ள எமது நீண்ட கால வாடிக்கையாளர்களுக்கு வசதியான சேவைகளை வழங்குவதாக அமைந்துள்ளது' என்றார்.

இலங்கையில் PVC குழாய்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் மத்தியில், PVC குழாய்கள் உற்பத்தி மற்றும் பொருத்திகள் உற்பத்திக்கான SLS 147 மற்றும் SLS 659 தரச்சான்றுகளை பெற்ற  பெற்றுக்கொண்ட முதலாவது நிறுவனம் எனும் பெருமையையும் சென்ரல் இன்டஸ்ரிஸ் தனதாக்கியிருந்தது. சென்ரல் இன்டஸ்ரிஸ் நிறுவனம் PVC Pipe, PVC Fitting, PE Water Tank, Stainless Steel Water Tanks, PE Septic Tank, Garden Hose, PVC Compact Ball Valves, Solvent Cement, Electrical Conduits,  ; Krypton Electrical Switches மற்றும் Accessories ஆகியவற்றையும் உற்பத்தி செய்து வருகிறது.

சென்ரல் இன்டஸ்ரிஸ் தயாரிப்புகள் அவற்றின் நம்பிக்கை, நீடித்த உழைப்பு மற்றும் பாதுகாப்பு போன்ற காரணகளால், இலங்கையின் வாடிக்கையாளர்களின் மனத்தில் முதலில் தோன்றும் தயாரிப்புகளாக அமைந்துள்ளன. எனவே கம்பனியின் தயாரிப்புகளுக்கான கேள்வி தொடர்ந்து அதிகரித்த வண்ணமுள்ளது. 'நிலையான மற்றும் பாதுகாப்பான உறவு' எனும் நாமம் சென்ரல் இன்டஸ்ரிஸ் தயாரிப்புகளுடன் பின்னிப்பிணைந்து காணப்படுகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .