2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பங்குகளின் விலை வீழ்ச்சி

A.P.Mathan   / 2014 பெப்ரவரி 20 , மு.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு பங்குச்சந்தை கடந்த ஆறுவாரங்களில் பதிவாகிய மிகவும் குறைந்த பெறுமதிகளை நேற்றைய தினம் பதிவு செய்திருந்தது. இதில் ஜோன் கீல்ஸ் பங்குகளின் விலைச் சரிவு பிரதான பங்களிப்பை ஏற்படுத்தியுள்ளதாக பங்கு முகவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

கடந்த ஆறு வார காலத்தில், ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பங்கின் விலை 14 வீத சரிவை பதிவு செய்துள்ளதாகவும், இதன் காரணமாக பிரதான சுட்டெண்கள் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

நடப்பு நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில், ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் இலாபத்தை பதிவு செய்திருந்த போதிலும், பங்குகளின் விலைச் சரிவு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .