2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

ஹம்பாந்தோட்டை ஷங்ரிலா ஹோட்டல் இந்த வருட இறுதியில் அங்குரார்ப்பணம்?

A.P.Mathan   / 2014 பெப்ரவரி 24 , மு.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹம்பாந்தோட்டையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் ஷங்ரிலா ஹோட்டலின் முதற்கட்ட நிர்மாணப்பணிகள் இந்த வருட இறுதியில் பூர்த்தியாக்கப்பட்டு ஹோட்டல் அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ளதாக குறித்த ஹோட்டல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

பிரபல அரசியல்வாதி ஒருவரின் அழுத்தம் காரணமாக இந்த ஹோட்டல் நிர்மாணப் பணிகளை துரிதப்படுத்த நேரிட்டுள்ளதாகவும், தாம் முதற்கட்டத்தில் உத்தேசித்திருந்த நிர்மாணப் பணிகளை விட குறைந்தளவு நிர்மாணப் பணிகளையே இந்த காலப்பகுதியில் பூர்த்தி செய்ய முடியும் எனவும் அறிவித்துள்ளது.

ஹம்பாந்தோட்டையில் மொத்தம் 375 அறைகளை கொண்டு கொல்ஃவ் திடல், தென்னந்தோப்பு, மணல் திட்டுக்கள் கொண்டு இந்த ஹோட்டல் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. தவிர்க்க முடியாத காரணங்களினால் இந்த பணிகளை துரித கதியில் முன்னெடுத்து பூர்த்தி செய்ய நேர்ந்துள்ளதாக கம்பனி குறிப்பிட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .