2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

ரூபாவின் பெறுமதி மூன்று மாதங்களில் ஆகக்குறைந்த பெறுமதிக்கு சரிவு

A.P.Mathan   / 2014 பெப்ரவரி 25 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இறக்குமதியாளர்களின் டொலர் கேள்வி அதிகரித்து காணப்பட்டதை தொடர்ந்து, ரூபாவின் பெறுமதி கடந்த மூன்று மாதங்களில் பதிவாகியிருந்த ஆகக்குறைந்த பெறுமதியை நேற்றைய தினம் பதிவு செய்திருந்தது. ஏப்ரல் மாதத்தில் பண்டிகை காலத்தை முன்னிட்டு, இறக்குமதி நடவடிக்கைகள் தற்போது முதல் சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில், ரூபாவின் பெறுமதி மதிப்பிறங்கியுள்ளதாக நாணயமாற்று முகவர்கள் தெரிவித்திருந்தனர்.

நேற்றைய தினம் நாணயமாற்று விகிதங்களுக்கு அமைவாக, அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி 131.00-10 ஆக அமைந்திருந்தது. இது டிசம்பர் 3ஆம் திகதி பதிவாகியிருந்த பெறுமதியை தொடர்ந்து பதிவாகிய குறைந்த பெறுமதி என்பது குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கடந்த வாரம் மொத்தமாக 2.32 பில்லியன் ரூபா பெறுமதியான அரச முறிகளை விற்பனை செய்திருந்தனர், அதேவேளை 5.29 பில்லியன் ரூபாவை பங்குகளில் முதலீடு செய்திருந்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .