2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

ஜூன் மாதம் முதல் மின்சார கட்டணம் அதிகரிப்பு?

A.P.Mathan   / 2014 பெப்ரவரி 26 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை மின்சார சபை தொடர்ந்தும் நட்டத்தில் இயங்கி வருவதாகவும், தற்போது சுமார் 40 பில்லியன் வரையிலான நட்டத்தை வருடமொன்றில் எதிர்நோக்கியுள்ளதாகவும், 2012ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட மின் கட்டண அதிகரிப்பு இந்த நட்டத்தை ஈடு செய்ய போதுமானதாக இல்லாததுடன், ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கு ஒரு தடவை மின் கட்டணத்தை மீளாய்வு செய்து மாற்றத்தை ஏற்படுத்தும் வகையிலான முறை காணப்பட்டபோதிலும் அது நடைமுறைப்படுத்தப்படாமல் உள்ளதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தானத்தின் மூலம் மின்சார சபைக்கு வழங்கப்படும் மானியம் நீக்கப்படவுள்ள நிலையில், கட்டணப்பட்டியலில் அறவிடப்படும் எரிபொருள் கட்டணம் விரைவில் நீக்கப்படாத நிலை காணப்படுவதாகவும் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

மின்சார கட்டணம் அதிகரிக்கப்படும் திகதி குறித்து ஆணைக்குழு அறிவிக்க மறுப்பு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .