2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

புற்றுநோய் வைத்தியசாலைக்கு அமானா வங்கி உதவி

A.P.Mathan   / 2014 பெப்ரவரி 26 , பி.ப. 01:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு அமானா வங்கி அண்மையில் மஹரகமவில் உள்ள தேசிய புற்றுநோய் நிறுவகத்தின் கதிரியக்கப் பிரிவிற்கு கணனிகளை அன்பளிப்புச் செய்தது. வங்கியின் சார்பில் மேற்படி அன்பளிப்பை வங்கியின் பிரதம தொழிற்பாட்டு அதிகாரி முஹம்மத் அஸ்மீர், டொக்டர் திருமதி தீரா செலராவிடம் கையளித்தார். வங்கியின் நுகர்வோர் வங்கியியல் மற்றும் மூலோபாய சந்தைப்படுத்தல் பிரிவின் துணைத் தலைவர் சித்தீக் அக்பர், டொக்டர் நிஷhன் சிரிவர்தன, வைத்தியசாலையின் ஏனைய வைத்தியர்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

அங்கு உரையாற்றிய திரு. அஸ்மீர் அவர்கள் ' தேசிய புற்றுநோய் வைத்தியசாலையின் செயற்பாடுகளை விருத்தி செய்வதற்காக மற்றுமொரு உதவியை வழங்க முடிந்துள்ளதையிட்டு நாம் உண்மையில் மகிழ்ச்சியடைகின்றோம்' என்றார்.

இது தொடர்பாக கருத்து வெளியிட்ட டொக்டர் நிஷhன் அவர்கள் ' கதிரியக்கப் பிரிவின் வசதிகளை மேம்படுத்துவதற்காக அமானா வங்கியினால் வழங்கப்படும் தொடர்ச்சியான ஆதரவை நாம் வெகுவாக பாராட்டுகின்றோம். இந்த வங்கியுடன் இணைந்து செயற்படுவதற்கு நாம் எதிர்பார்த்துள்ளோம்' என்று குறிப்பிட்டார்.

உலக புற்றுநோய் தினம் ஒவ்வொரு வருடமும் பெப்ரவரி 4 ஆம் திகதி அனுஷ;டிக்கப்படுவதோடு, இந்த தினத்தில் சர்வதேச புற்றுநோய் தடுப்புக்கான ஒன்றியமும், அதன் அங்கத்தவர்களும், சர்வதேச ரீதியில் ஒன்று சேர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்த செயற்படுகின்றனர்.

இலாபங்களையும், இதர நன்மைகளையும் பெற்றுக்கொள்வது எந்தளவு முக்கியமோ அந்தளவிற்கு ஒழுக்கநெறிகளையும், பொறுப்புக்களையும் மதிக்கும் ஒரு வங்கியாக அமானா வங்கி சுகாதார நலனில் கவனம் செலுத்தும் பல செயற்திட்டங்களை முன்னெடுத்துள்ளது. இந்த அன்பளிப்பை வழங்குவதற்கு முன்னர், அமானா வங்கி  தளபாடங்களையும், எக்ஸ்ரே இலுமினேட்டர் கருவிகளையும் வழங்கி இந்த கதிரியக்கப் பிரிவை புதுப்பித்துக் கொடுத்து, வைத்தியசாலையின் செயற்பாடுகளுக்கு துணைபுரிந்தது. களுபோவில பொது வைத்தியசாலையின் சிறுவர் வாட்டினை நிர்வகித்தல், சுகாதார சிகிச்சை முகாம்களுக்கு ஆதரவளித்தல், பிரதேச வைத்தியசாலைகளுக்கு மருத்துவ உதவிப் பொருட்களை வழங்குதல் என்பன இவற்றில் சிலவாகும்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .