2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

சர்வதேச வனவியல் மற்றும் சுற்றுச்சூழல் கருத்தரங்கிற்கு அனுசரணை வழங்கிய சதாஹரித பிளாண்டேஷன்

A.P.Mathan   / 2014 மார்ச் 05 , பி.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் மற்றும் வனவியல் பீடத்தின் மூலம் அண்மையில் ஒழுங்கு செய்யப்பட்ட சர்வதேச வனவியல் மற்றும் சுற்றுச்சூழல் கருத்தரங்கிற்கு (IFES) சதாஹரித பிளாண்டேஷன் லிமிடெட் நிறுவனம் பிரதான அனுசரணை வழங்கியிருந்தது.

இக் கருத்தரங்கு, நிலையான எரிசக்தி வளத்துறை அமைச்சர் கௌரவ சுசில் பிறேம ஜயந்த அவர்களின் தலைமையின் கீழ் MAS fabric பார்க்கில் இடம்பெற்றது. வணிக நோக்கிலான வனவியலில் முதன்மை கம்பனியாக திகழும் சதாஹரித பிளான்டேஷன் லிமிடெட், இலங்கையில் பசுமை பொருளாதாரத்தை மேம்படுத்தவும், இத்தகைய முயற்சிகள் ஊடாக வாழ்க்கையை மேம்படுத்துவதற்காகவும் தம்மை அர்ப்பணித்துள்ளது.

இந்த வருட கருத்தரங்கின் தொனிப்பொருள் 'சுற்றுச்சூழல் மேலாண்மையில் வெப்பமண்டல காடுகள் மற்றும் அண்மைய அபிவிருத்திகள்' ஆகும். மேலும் உயிரியல் பாதுகாப்பு மேலாண்மை, இயற்கை வளங்களின் சமூக பொருளாதாரம், கழிவு முகாமைத்துவம் மற்றும் கழிவு கட்டுப்படுத்தல், மாற்று எரிசக்தி மூலம் மற்றும் காலநிலை மாற்றங்கள் ஆகிய 7 தொனிப்பொருளின் கீழ் நிகழ்வுகள் நடைபெற்றன. இந்த கருத்தரங்கில் புகழ்பெற்ற சர்வதேச ஆய்வாளர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் பலரும் பங்குபற்றியிருந்தனர்.

இந்த கருத்தரங்குக்கான பிரதான அனுசரணை குறித்து சதாஹரித பிளாண்டேஷன் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று பணிப்பாளர் எச்.கே.ரோஹன கருத்து தெரிவிக்கையில், 'வணிக நோக்கிலான வனவியல் பிளாண்டேஷன் எனும் ரீதியில், இலங்கையில் பசுமை பொருளாதாரத்தின் முக்கியத்துவம் குறித்து பல்வேறு சமூகத்தினரை தொடர்ச்சியாக தெளிவூட்டி வருகின்றோம். இத்தகைய கருத்தரங்குகள் ஊடாக, CO2 மீள்சுழற்சி பற்றிய தகவல்களையும், பூமியில் வாழும் உயிரினங்களின் பாதுகாப்புக்கான இயற்கை காடுகளின் பங்களிப்பு குறித்து பங்குபற்றுநர்கள் அறிந்துகொள்ள முடியும்.

இக் கருத்தரங்கின் போது இயற்கை வளங்களின் நிலையான பயன்பாடு மற்றும் மாற்று எரிசக்தி பயன்பாட்டின் சாதகமான விளைவுகள் போன்றவற்றின் முக்கியத்துவம் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது' என்றார். ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் இத் திட்டத்தின் மூலம் வனவியல் மேலாண்மையில் புதிய கண்டுபிடிப்புகள் குறித்து அறிவு பிரச்சாரத்தை மேற்கொள்வதற்கான வாய்ப்பு காணப்படுவதால் இத்தகைய கருத்தரங்குக்கு அனுசரணை வழங்க வேண்டியமை தமது கடமை மேலும் அவர் தெரிவித்தார்.

IFES கருத்தரங்கு 1995ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருவதுடன், தெற்காசியாவிலேயே மிக முக்கியமான வனவியல் மற்றும் சுற்றுச்சூழல் கருத்தரங்காக கருதப்படுகிறது. சுற்றுச்சூழல் கல்வி ஒழுக்கம் சார்ந்த புதிய கண்டுபிடிப்புகள் குறித்து அறிவார்ந்த கலந்துரையாடல்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு காணப்படுவதன் காரணமாக இக் கருத்தரங்கு புகழ்பெற்ற ஆய்வாளர்கள், கல்வியாளர்கள், ஒழுங்குமுறை தீர்மானம் எடுப்பவர்கள் மற்றும் பொது-தனியார் துறை தொழிலதிபர்கள் ஆகியோரின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது.

சதாஹரித பிளாண்டேஷன் நிறுவனம், இலங்கையில் பசுமை பொருளாதார நடைமுறைகளை ஊக்குவித்து வருவதுடன், புதிய முதலீடுகளை ஊக்கப்படுத்தும் நோக்கில் 12 ஆண்டுகளுக்கு முன்னர் தமது செயற்பாடுகளை ஆரம்பித்திருந்தது. இந் நிறுவனம் நுண்ணிய முதலீட்டாளர்களை நிதிசார் ரீதியில் வலுப்படுத்துவதுடன், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பேற்படாத வகையில் நாட்டின் பொருளாதாரத்திற்கு வெளிநாட்டு அன்னிய செலாவணியை சம்பாதித்து கொடுக்கும் நோக்கில் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக முதலீடுகளை மேற்கொண்டு வருகிறது.

தற்போது சதாஹரித பிளாண்டேஷன் நிறுவனத்தில் 20,000 இற்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் தம்மை பதிவு செய்து கொண்டுள்ளதுடன், 2,000 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலம் பயிர் செய்யப்படுகிறது. மேலும் இந்நிறுவனம் தேக்கு, சந்தனம், றம்புட்டான் போன்ற மரங்களை பயிர் செய்து வருகிறது.
சிறந்த தொழிற்துறை நடைமுறைகளை பேணும் சதாஹரித பிளாண்டேஷன் நிறுவனம் ISO 14001 தரச்சான்றிதழை பெற்றுள்ளது. மேலும் வெளிப்படையான மேலாண்மை அணுகுமுறைகள் மற்றும் சிறந்த நிர்வாகம் போன்றவற்றின் காரணமாக, எவ்வித வாடிக்கையாளர் புகார்களோ அல்லது சட்ட குறுக்கீடுகளோ இன்றி திறம்பட வணிகத்தில் ஈடுபட சதாஹரித நிறுவனத்தால் முடிந்துள்ளது.

வணிக நோக்கிலான வனவியல் பிரிவின் அபிவிருத்திக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வரும் சதாஹரித பிளாண்டேஷன் நிறுவனமானது இலங்கையில் மரங்கள் வெட்டுதலை தடுத்துள்ளதுடன், காடுகளை பாதுகாக்கும் முயற்சிகளில் வெற்றி கண்டுள்ளது. சதாஹரித நிறுவனத்தின் சுற்றுச்சூழல் நடைமுறைகளை பாராட்டும் வகையில், 2012 தேசிய சுற்றுச்சூழல் விருதுகள் வழங்கும் நிகழ்வில் 'சுற்றுச்சூழல் பாதுகாப்பு' பிரிவின் கீழ் ஜனாதிபதி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .