2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

ஓய்வூதிய பணிக்கொடை கொடுப்பனவுக்கு பதிலாக கடன் திட்டம்?

A.P.Mathan   / 2014 மார்ச் 06 , மு.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசாங்க ஊழியர்கள் தமது பதவி நிலைகளிலிருந்து ஓய்வு பெறும் போது, பெற்றுக் கொள்ளக்கூடிய வகையில் அமைந்துள்ள ஓய்வூதிய பணிக்கொடை கொடுப்பனவுக்கு பதிலாக கடன் திட்டம் ஒன்றை அறிமுகம் செய்வது தொடர்பில் அரசாங்கத்தின் புதிய யோசனைத் திட்டத்துக்கு நேற்று நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்புகள் வெளிப்படுத்தப்பட்டிருந்தன.

அரச ஊழியர் ஒருவர், தாம் ஓய்வூதியம் பெறுவது தொடர்பில் அறிவித்து ஒரு மாத காலப்பகுதியினுள் இரண்டு ஆண்டு காலப்பகுதிக்குரிய மொத்த தொகைப் பணத்தை, 10 ஆண்டுகள் வரை மீள செலுத்தக்கூடிய வகையில் பெற்றுக் கொள்ளக்கூடிய ஒரு முறையாக அமைந்துள்ளது.

இந்த முறையில் வட்டி எதுவும் குறித்த அரச ஊழியர்களிடமிருந்து அறவிடப்படுவதில்லை. இதன் காரணமாக பெருமளவான அரச ஊழியர்களுக்கு தமது ஓய்வூதியத்துக்கு மேலதிகமாக இந்த கொடுப்பனவு என்பது பெருமளவு அனுகூலத்தை வழங்குவதாக அமைந்துள்ளதாகவும், இந்த முறையில் மாற்றத்தை ஏற்படுத்தி கடன் வழங்கும் திட்டமொன்றை வங்கிகளுடன் இணைந்து அறிமுகம் செய்வதன் மூலம் குறித்த கொடுப்பனவை பெறுபவர்களுக்கு வட்டி செலுத்த நேரிடலாம் எனவே இந்த பரிந்துரைக்கு தமது கடும் எதிர்ப்பை வெளியிடுவதாக மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்திருந்தார்.

அரச தரப்பிலிருந்து இதற்கான பதில் இந்த வாரத்தில் எதிர்பார்க்கப்படுகிறது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .