2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

அலுமெக்ஸ் நிறுவனத்தின் ஆரம்ப பொது பங்குகள் விற்றுத்தீர்ந்தன

A.P.Mathan   / 2014 மார்ச் 07 , மு.ப. 02:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

அலுமெக்ஸ் நிறுவனத்தின் 838 மில்லியன் ரூபா பெறுமதியான பொது பங்கு வழங்கல், பொது மக்களுக்காக அறிமுகம் செய்யப்பட்ட முதல் நாளிலியே விற்றுத்தீர்ந்து விட்டதாகவும், இதன் காரணமாக கொழும்பு பங்குச்சந்தையின் விதி முறைகளுக்கு அமைவாக பங்கு விநியோகத்தை நிறைவு செய்துள்ளதாகவும் கம்பனி அறிவித்துள்ளது. 59.9 மில்லியன் சாதாரண வாக்குரிமை பங்குகளை 14 ரூபா வீதம் பொது மக்களுக்கு வழங்கியிருந்தது.

இந்த பொது பங்கு வழங்கல் மூலம் திரட்டப்பட்ட நிதியைக் கொண்டு, 2014-2015 முதலாவது காலாண்டில் புதிய பவுடர் கோட்டிங் உற்பத்தி வளமொன்றை சுவீகரித்து, அதனை முன்னெடுத்துச் செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளது. இதன் மூலம் கம்பனியின் தற்போதைய பவுடர் கோட்டிங் உற்பத்தியை இருமடங்காக உயர்த்தி வருடாந்தம் 1800 மெட்ரிக் தொன் வரை உற்பத்தி செய்து அதிகரித்துச் செல்லும் கேள்வியை நிவர்த்தி செய்ய திட்டமிட்டுள்ளது.

பல வருடங்களாக அலுமெக்ஸ் குழுமத்தின் நிலையான மற்றும் உயர்ந்த நிதிசார் பெறுபேறுகளின் காரணமாகவும், ஹேலீஸ் குழுமத்தின் பின்னணியையும் கொண்டுள்ளமையின் காரணமாக, பொது மக்கள் மத்தியில் இந்த நிறுவனத்தின் பங்குகள் மீது அதிகளவு ஈடுபாடு ஏற்பட்டிருந்தது. நாடு முழுவதிலுமிருந்து அதிகளவான விண்ணப்பங்கள் கிடைத்திருந்ததாக கம்பனி அறிவித்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .