2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

இலங்கைக்கு நிதி உதவிகளை வழங்க ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானம்

A.P.Mathan   / 2014 மார்ச் 10 , மு.ப. 08:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைகக்கு எதிராக மனித உரிமைகள், சிறந்த மேலாண்மையின்மை மற்றும் தொழில்உறவுகள் சீராக இன்மை போன்ற வெவ்வேறான கருத்துக்களுக்கு மத்தியில், இலங்கைக்கான தமது நிதியுதவிகளில் எவ்வித மாற்றமும் இன்றி தொடர்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவின் தலைமை அதிகாரி டேவிட் டாலி தெரிவித்தார்.

2014ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் மொத்தமாக 110 மில்லியன் யூரோவை நிதியுதவியாக வழங்க தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். இந்த தொகை, 2007ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் இலங்கைக்கு வழங்கப்பட்ட நிதியுதவிகளுக்கு நிகரான தொகை என்பதும் குறிப்பிடத்தக்கது.

வடக்கு, கிழக்கு மாகாணத்தில் யுத்தம் காரணமாக வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் தமது செயற்பாடுகளை அதிகளவில் முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .