2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

ஆண்டின் சிறந்த நிதிச்சேவைகள் வழங்குநராக பீபிள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் பிஎல்சி தெரிவு

A.P.Mathan   / 2014 மார்ச் 10 , பி.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


எட்டாவது தடவையாக இடம்பெற்ற SLIM நீல்சன் மக்கள் விருதுகள் 2014 நிகழ்வில், தொடர்ச்சியாக இரண்டாவது வருடமாக ஆண்டின் சிறந்த நிதிச் சேவைகள் வழங்குநராக பீபிள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் பிஎல்சி நிறுவனம் தெரிவு செய்யப்பட்டிருந்தது. இந்த விருதுகள் வழங்கும் வைபவம் பத்தரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் 26.02.2014 அன்று இடம்பெற்றது. மக்கள் விருதுகள் என்பது மக்களின் மனம் கவர்ந்த வர்த்தக நாமங்களை அவர்களே தெரிவு செய்யும் வகையில் வகையில் அமைந்த விருது வழங்கும் நிகழ்வாக அமைந்துள்ளது. இந்த விருதை தனதாக்கியிருந்ததன் மூலம், பீபிள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் பிஎல்சி, மக்களின் மனமறிந்த நிதிச் சேவைகள் வழங்குநர் என்பது மேலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

SLIM நீல்சன் மக்கள் விருதுகள் என்பது 2006 ஆம் ஆண்டு முதல் SLIM நிறுவனமானது நீல்சன் கம்பனி லங்கா பிரைவேற் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து முன்னெடுக்கும் விருதுகள் வழங்கும் நிகழ்வாக அமைந்துள்ளது. சர்வதேச ரீதியில் முன்னணி சந்தைப்படுத்தல் தரவுகளை வழங்கும் நிறுவனம் எனும் வகையில் நீல்சன், வர்த்தக நாமங்களின் பிரபல்யத்தன்மையை கண்டறிவது, நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களின் பிரபல்யம் பற்றி கண்டறியும் வகையில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இந்த ஆண்டு முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகளில் இலங்கையின் வடக்கு, கிழக்கு பிராந்தியங்களைச் சேர்ந்த மக்களிடமிருந்தும் கருத்துக்கள் பெறப்பட்டிருந்தன. மக்களின் தெரிவுக்கு அமைய ஒவ்வொரு வெற்றியாளரும் தத்தமது விருதுகளுக்காக தெரிவு செய்யப்பட்டிருந்தனர். வாடிக்கையாளர்களின் தெரிவின் மூலம் தீர்மானிக்கப்படும் மிகவும் உயர்ந்த விருதுகளில் ஒன்றாக இந்த மக்கள் விருதுகள் அமைந்துள்ளமை விசேட அம்சமாகும்.

1995ஆம் ஆண்டு தாபிக்கப்பட்ட பீபிள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் பிஎல்சி நிறுவனம், மக்கள் வங்கியின் உறுதிப்பாடு, உறுதுணையுடன் சேவைகளை முன்னெடுத்திருந்தது. தற்போது இலங்கையின் நிதிச் சேவைகள் துறையில் உறுதியான நிலையில் பீபிள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் பிஎல்சி திகழ்கிறது. 2011ஆம் ஆண்டு பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டிருந்ததுடன், இலங்கையில் செயற்படும் வங்கி சாராத மாபெரும் நிதியியல் நிறுவனமாக திகழ்கிறது. ஃபிட்ச் ரேடிங் மற்றும் ஸ்டான்டர்ட் அன்ட் புவர் எனும் இரு சர்வதேச தரப்படுத்தல்களையும் இந்நிறுவனம் பெற்றுள்ளது. சந்தை மூலதனவாக்கத்தை கருத்தில் கொள்ளும் போது, இலங்கையில் காணப்படும் சிறந்த 25 நிறுவனங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது.

இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவனத்தால் வழங்கப்படும் சிறந்த ஆண்டறிக்கைக்கான தங்க விருதினையும் 2013ஆம் ஆண்டு பீபிள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் பிஎல்சி தனதாக்கியிருந்தது.

இத்தருணத்தில் பீபிள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் பிஎல்சியானது அனைத்து தரப்பினருக்கும் பிரதானமாக தன்னிகரில்லா அதன் வாடிக்கையாளர்களுக்கு தம் நிறுவனத்தின் மீது கொண்டுள்ள நம்பிக்கைக்கும் அதன் வெளிப்பாடாய் தம்மை சிறந்த நிதிச் சேவை வழங்குநராய் தெரிவு செய்தமைக்கும் தன் நன்றியினை சிரம் தாழ்த்தி தெரிவித்துக் கொள்கிறது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .