2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மக்களுக்கு சுமை: ரிஎன்எஸ் லங்கா எல்எம்டி கருத்துக்கணிப்பு

A.P.Mathan   / 2014 மார்ச் 11 , மு.ப. 01:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பொன்றில், அதிகரித்துச் செல்லும் வாழ்க்கைச் செலவு தொடர்பில் மக்கள் அதிகளவு கவனம் செலுத்தியுள்ளதாகவும், தமக்கு பெரிதும் சுமையாக இது அமைந்துள்ளதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர். 
 
ரிஎன்எஸ் லங்கா மற்றும் எல்எம்டி ஆகியன இணைந்து நாடு முழுவதும் முன்னெடுத்திருந்த இந்த ஆய்வின் மூலம் இந்த கருத்து வெளிப்பட்டுள்ளது. 88 வீதமான மக்கள் வாழ்க்கைச் செலவு கட்டுக்கடங்காமல் அதிகரித்துச் செல்வதாக கருத்து வெளியிட்டிருந்த அதேவேளை, 70 வீதமானவர்கள், வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு ஏற்ப சம்பள அதிகரிப்பு வழங்கப்படுவதில்லை எனும் கருத்தையும் முன்வைத்திருந்தனர். 
 
கருத்துக்கணிப்புக்கு உட்படுத்தப்பட்ட 10 பேருக்கு 8 பேர் எனும் விகிதத்தில் தற்போது நடைமுறையில் உள்ள மின்சார கட்டணம் அறவிடும் முறை என்பது ஏற்புடையதாக இல்லை என கருத்து தெரிவித்திருந்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .