2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

சிறுவர் சந்தை

Kogilavani   / 2014 மார்ச் 11 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


வி.விஜயவாசகம்


செலான் வங்கி சாவகச்சேரி கிளையின் ஏற்பாட்டில், மாணவர்களின் ஆளுமை விருத்தியை அதிகரிக்கும் நோக்குடன் மாணவர்களிடத்தில் சேமிப்புப் பழக்கத்தினை ஊக்குவிக்கும் முகமாக சாவகச்சேரி இந்து ஆரம்பப் பாடசாலை பாடசாலை மாணவர்களின் 'சிறுவர் சந்தை'  இன்று (11) நடைபெற்றது.

இந்த சிறுவர் சந்தையினை தென்மராட்சிக் வலயக் கல்விப் பணிப்பாளர் சு.கிருஷ்ணகுமார் ஆரம்பித்து வைத்தார்.

இந்தச் சிறுவர் சந்தையில் சிறுவர்கள், மரக்கறிகள், ஓலைகளால் செய்யப்பட்ட பொருட்கள், பலசரக்குப் பொருட்களை காட்சிப்படுத்தி விற்பனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இந்நிகழ்வில், சாவகச்சேரி இந்து ஆரம்பப் பாடசாலையின் அதிபர் திருமதி சியமிளா கந்தசாமி, பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .