2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

நீலங்களுக்கிடையிலான சமருக்கு நித்தியகல்யாணி ஜுவல்லர்ஸ் அனுசரணை

A.P.Mathan   / 2014 மார்ச் 13 , மு.ப. 06:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


கொழும்பு றோயல் கல்லூரிக்கும் கல்கிசை பரி.தோமாவின் கல்லூரக்கும் இடையில் வருடாந்தம் இடம்பெறும் மாபெரும் கிரிக்கெட் போட்டித் தொடரான 'நீலங்களுக்கிடையிலான சமர்' என அழைக்கப்படும் போட்டிகளுக்கு வெள்ளவத்தை நித்தியகல்யாணி ஜுவல்லர்ஸ் அனுசரணை வழங்க முன்வந்துள்ளது. இதற்கமைவாக, 135 ஆவது வருடமாக இடம்பெறும் இலங்கையின் பழமையான கிரிக்கெட் தொடர் என வர்ணிக்கப்படும் இந்த போட்டிகள் ஆரம்பமாகும் முன்னர் நாணய சுழற்சியை மேற்கொள்வதற்கென தங்க நாணயம் ஒன்றை வடிவமைத்து வழங்கியுள்ளது. இந்த கையளிப்பு நிகழ்வு, விளையாட்டு அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வில் போட்டி ஏற்பாட்டாளர்களிடம் கையளிக்கப்பட்டிருந்தது.

இந்த ஞாபகார்த்த தங்க நாணயம், வெள்ளவத்தை நித்தியகல்யாணி ஜுவல்லர்ஸின் பங்காளரான வை.பி.சிவகுமார் அவர்களின் மூலம், றோயல் - தோமியன் 2014 ஆம் ஆண்டுக்கான போட்டி ஏற்பாட்டுக் குழுவின் தலைவரான ஹரித் ஜயசூரிய, ரோயல் கல்லூரியின் அதிபர் உபாலி குணசேகர மற்றும் பரி.தோமாவின் கல்லூரியின் அறங்காவலர் பேராசிரியர் இந்திரா டி சொய்சா ஆகியோரிடம் கையளிக்கப்பட்டிருந்தது. இணை ஏற்பாட்டுக்குழுவின் தலைவரின் கருத்துக்கு அமைவாக, இந்த தங்க நாணயம், இனி வரும் காலங்களில் இடம்பெறவுள்ள மாபெரும் போட்டிகளில் பயன்படுத்தப்படவுள்ளதுடன், வங்கி வைப்பில் பராமரிக்கப்படவுள்ளது.

நித்தியகல்யாணி ஜுவல்லர்ஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஏ.பி.ஜயராஜா கருத்து வெளியிடுகையில், 'தங்க ஆபரணங்கள் ஏற்றுமதியில் முன்னோடி எனும் வகையில், இந்த இரு பாடசாலைகளுக்கும் இடையிலான வருடாந்த மாபெரும் கிரிக்கெட் சுற்றுப்போட்டிகளுடன் கைகோர்ப்பதையிட்டு பெருமையடைகிறோம். இரு பாடசாலைகளின் மூலமாகவும் பாரம்பரிய முறையில் இந்த விளையாட்டு முன்னெடுக்கப்படுகிறது. உள்நாட்டையும் வெளிநாடுகளையும் சேர்ந்த பல நலன்விரும்பிகளின் மனதைக் கவர்ந்த போட்டியாக இது அமைந்துள்ளது' என்றார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .