2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

பெப்ரவரியில் சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு

A.P.Mathan   / 2014 மார்ச் 14 , மு.ப. 09:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெப்ரவரி மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்திருந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 24.5 வீதத்தால் அதிகரித்திருந்தது. மொத்தமாக 141,878 பேர் கடந்த மாதம் இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளாக வருகை தந்திருந்தனர் என சுற்றுலா ஊக்குவிப்பு அலுவலகம் அறிவித்துள்ளது.

ஆண்டின் முதல் இரு மாதங்களில் வருகை தந்தவர்களின் எண்ணிக்கை 28.5 வீதத்தால் அதிகரித்து 288,453 ஆக பதிவாகியிருந்தது.

தெற்காசியாவிருந்து வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 22.9 வீதம் அதிகரித்து காணப்பட்டது. கிழக்கு ஆசியாவிலிருந்து வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 31.2 வீதத்தால் அதிகரித்திருந்தது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .