2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

கொல்ஃவ் விளையாட்டில் அதிகளவு வாய்ப்புகள் காணப்படுகின்றன: பிரியாத் பெர்ணான்டோ

A.P.Mathan   / 2014 மார்ச் 16 , மு.ப. 07:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கையில் கொல்ஃவ் விளையாட்டு பிரபல்யமடைய ஆரம்பித்துள்ளது, ஒரு காலத்தில் உதவியாளராக (caddies) செயற்படுவதில் ஈடுபட்டவர்கள், தமது ஆளுமை மற்றும் திறமை போன்றவற்றின் மூலமாக நிபுணத்துவ ரீதியில் முன்னேற்றம் கண்டு வருகின்றனர்' என்று UTE நிறுவனத்தின் தலைவரும், இலங்கை கொல்ஃவ் கழகத்தின் உப தலைவருமான பிரியாத் பெர்னான்டோ தெரிவித்தார்.

1970ஆம் ஆண்டு எச்.எல்.பிரேமதாச என்ற உதவியாளராக (caddy) செயலாற்றியவர், சிலோன் திறந்த சுற்று போட்டியின் முதலாவது வெற்றியாளராக தெரிவாகியிருந்ததன் மூலம் இந்த முன்னேற்றகரமான செயற்பாடு ஆரம்பமாகியிருந்தது. இதற்கு முன்னர் உதவியாளர்களுக்கிடையிலான (caddies) போட்டி என்பது, அவர்களுக்கிடையே இடம்பெற்று வந்தது. இலங்கையில் நிபுணத்துவம் வாய்ந்த கொல்ஃவ் விளையாட்டு என்பது இலங்கையில் அதிகளவில் பிரபல்யமடையவில்லை, ஏனெனில் இந்த விளையாட்டுக்கு அனுசரணை வழங்க பெருமளவானோர் ஆர்வம் காண்பிக்கவில்லை. சிலோன் கொல்ஃவ் கழகம் என்பது, காலப்போக்கில் ஸ்ரீலங்கா கொல்ஃவ் யூனியன் என பெயர் மாற்றம் பெற்றது, இதனை தொடர்ந்து, கொல்ஃவ் விளையாட்டில் ஆர்வம் உள்ளவர்களிடமிருந்து பண உதவிகளை எதிர்பார்த்திருந்தது. அன்று முதல் ஏனைய உதவியாளர்களும் உயர்ந்த மட்ட ஆரம்ப நிலையிலிருந்தவர்களுக்கு இலங்கையில் சிறந்த கொல்ஃவ் வீரருக்கான பட்டத்தை வெற்றி கொள்வதற்கு தனிச்சிறப்பை கொண்டிருக்கத் தேவையில்லை என்பதை வெளிப்படுத்தியிருந்தனர்.  1971ஆம் ஆண்டில் சுமதிபால, 1975 இல் வேம்பூ (உதவியாளராக இருந்து, பிரியாத் அவர்களின் தாயாரான புகழ்பெற்ற பாம் பெர்னான்டோ அவர்களின் பயிற்றுவிப்பாளராக மாறியவர்), ஜே ஏ ஜே பெரேரா மற்றும் சுனில் பெரேரா ஆகிய அனைவரும் உதவியாளராக ஆரம்பித்து, திறந்த சுற்றில் பங்கேற்று படிப்படியாக முன்னேற்றம் கண்டு, நிபுணத்துவம் வாய்ந்தவர்களாக உருவாகியிருந்தனர். பிரியாத் அவர்களின் தந்தையான பின் பெர்னான்டோ, இலங்கையில் ஒருவரால் வெற்றியீட்டிய அதிகளவான ஆரம்ப நிலை வெற்றிகளை கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவர் இலங்கை திறந்த சுற்று போட்டிகளில் வெற்றியீட்டியவர்களில் ஒருவராகவும் திகழ்கிறார்.

இன்று, தகுதி காண் சுற்று இடம்பெற்று, இரண்டு சுற்றுக்களின் பின்னர் தடை பிரயோகிக்கப்பட வேண்டிய ஒரு நிலைக்கு இந்த விளையாட்டு உயர்வடைந்துள்ளது. இதேபோல, உதவியாளராக திகழ்ந்தவர்கள், நிபுணர்களாக மாறிய பல சந்தர்ப்பங்களும் உண்டு, இவற்றில் நந்தசேன பெரேரா மற்றும் அநுர ரோஹண ஆகியோர் ஆசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று வெள்ளி பதக்கங்களை இலங்கைக்கு பெற்றுக் கொடுத்து புகழ் சேர்த்திருந்தமை மற்றும் பாகிஸ்தான், இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் ஆரம்பநிலை பட்டங்களை பெற்ற முதலாவது இலங்கையர் எனும் பெருமைக்குரிய லலித் குமார ஆகியோரை குறிப்பிடலாம். இந்தியாவின் கொல்ஃவ் விளையாட்டு என்பது வழங்கப்படும் பரிசுத் தொகையின் மூலம் வளர்ந்து வரும் நிலையில், இலங்கையைச் சேர்ந்த உதவியாளர்களாக திகழ்ந்த நுவரெலியாவைச் சேர்ந்த பிரபாகரன் மற்றும் வோட்டர்ஸ் எட்ஜ்ஜை சேர்ந்த தங்கராஜா ஆகியோரும் நிபுணத்துவம் வாய்ந்தவர்கள் எனும் நிலைக்கு உயர்ந்துள்ளனர். நந்தசேன அவர்களின் புதல்வாரன மிதுன் பெரேரா, தகப்பனாரை பின்பற்றி, நிபுணத்துவ பிரிவில் குறிப்பிடத்தக்களவு சாதனைகளை படைத்து வருகிறார். இந்திய மற்றும் ஆசிய நிபுணர்களின் சுற்றுக்கு தற்போது தகமை பெற்ற ஒரே இலங்கையர் எனும் பெருமையையும் இவர் கொண்டுள்ளார்.

2011ஆம் இலங்கையின் சிறந்த கொல்ஃவ் விளையாட்டு வீரர்களுடன் கைகோர்த்துள்ளமை தொடர்பில் UTE பெருமையடைகிறது. அவர்களின் வெற்றியில் பங்கேற்பதையிட்டு மகிழ்ச்சியடைகிறது.

இலங்கையின் முதல் தர கொல்ஃவ் விளையாட்டு போட்டிகளுக்கு அனுசரணை வழங்குவது குறித்த தீர்மானத்தை மேற்கொள்வது பிரியாத் பெர்னான்டோவுக்கு மிகவும் இலகுவானதாக அமைந்திருந்தது. ஏனெனில் இவர் இந்த போட்டிகளை அதிகளவு நேசிப்பவர் என்பதாலாகும். ஆரம்பநிலை வீரர்கள் அனைவருக்கும் முன்னெடுக்கப்படும் பின் பெர்னான்டோ கிரோன் ப்ரீ போட்டிகள் 2011ஆம் ஆண்டு ஜுலை மாதம் முதல் ஏற்பாடு இவராலும், இவரின் மைத்துனரான அனா புஞ்சிஹேவா ஆகியோரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. (முன்னாள் தலைவர் இலங்கை கிரிக்கெட் சபை 1995 - 96) இதன் மூலம் கழக அங்கத்துவத்தை பெற்றுக் கொள்ள முடியாத கொல்ஃவ் வீரர்களுக்கு அவசியமான பயிற்சிகளை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகளை பெற்றுக் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த நிகழ்வு தற்போது உலக ஆரம்ப நிலை கொல்ஃவ் (WAGR) தரப்படுத்தல்களில் ஒன்றாக உள்வாங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கை கொல்ஃவ் யூனியன் மூலம் முன்னெடுக்கப்படும் இந்த விளையாட்டுத் தொடருக்கு பிரியாத் மற்றும் அவரின் குடும்பத்தார் பிரத்தியேகமான முறையில் அனுசரணை வழங்கி வருகின்றனர்.

இதற்கு மேலதிகமாக, கொல்ஃவ் என்பது உலகளாவிய ரீதியில் வேகமாக வளர்ந்து வரும் விளையாட்டாக அமைந்துள்ளது. குறிப்பாக இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளில் கடந்த சில ஆண்டுகளில் 300க்கும் அதிகமான கொல்ஃவ் திடல்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. உலகின் செல்வந்த விளையாட்டுக்களில் ஒன்றாக திகழும் (ஃபோர்மியுலா 1 ரேசிங் விளையாட்டுக்கு அடுத்ததாக) கொல்ஃவ் விளையாட்டு, இலங்கையை பொறுத்தமட்டில் மேலும் அபிவிருத்தி செய்யப்படுமாயின், கொல்ஃவ் சுற்றுலா பிரதேசமாக மாற்றியமைக்கும் வகையிலும் இது அமைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆசியாவை பொறுத்தமட்டில் கொல்ஃவ் விளையாட்டுக்காக மாத்திரம் சுமார் 15 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் வலயமாக அமைந்துள்ளது. குறிப்பாக ஒலிம்பிக் விளையாட்டுக்களில் ஒன்றாக கொல்ஃவ் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, இந்த விளையாட்டில் தமது திறமைகளை வெளிப்படுத்துவதற்கு இலங்கையர்களுக்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் விளையாட்டு தொடர்களில் தமது திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்த முடியும் என பிரியத் தெரிவித்திருந்தார்.

கொல்ஃவ் விளையாட்டின் அனுகூலங்களில் இலங்கை விளையாட்டுத்துறைக்கு, பெருமளவு வெளிநாட்டு நாணயமாற்று வீதங்களை பெற்றுக் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது. 'கொல்ஃவ் விளையாட்டு திடல் ஒன்றுக்கு அருகாமையில் காணப்படும் சொத்துக்களின் விலைகளும் உயர்ந்த மட்டத்தில் காணப்படுகின்றன' என பிரியத் குறிப்பிட்டிருந்தார். கொல்ஃவ் கழகத்தின் வருமானம் என்பது பெருமளவில் சுற்றுலாப் பயணிகளின் மூலம் பெறப்படுகிறது. இவர்கள் இடைக்கால அங்கத்துவ கட்டணங்களை செலுத்தி வருகின்றனர். கொல்ஃவ் விளையாட்டை ஊக்குவிப்பது என்பது நாட்டின் வருமானத்துக்கு அந்நியச் செலாவணியை பெற்றுக் கொடுப்பதாக அமைந்துள்ளது.

இந்த விளையாட்டை பொறுத்தமட்டில் அதிகளவு வாய்ப்புகள் காணப்பட்ட போதிலும், இந்த விளையாட்டை இலங்கையில் ஊக்குவிப்பது என்பது மிகவும் சவால்கள் நிறைந்த ஒரு செயற்பாடாக அமைந்துள்ளது. சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட சம்பியன்சிப் போட்டிகளை ஏற்பாடு செய்வது என்பதற்கு 150 ஏக்கர் காணியில் விளையாட்டுத்திடல் ஒன்று அமைந்திருக்க வேண்டியது கட்டாயமானதாகும். கொழும்பில் அமைந்துள்ள ரோயல் கொழும்பு கொல்ஃவ் கழகம் என்பது 100 க்கும் குறைவான பகுதியை கொண்டுள்ளது. அதிகளவு நபர்கள் காணப்படும் நாட்களில் இந்த பகுதி ஆபத்து நிறைந்ததாக அமைந்துள்ளது. இந்த திடலுக்கு அண்மையில் காணப்படும் சதுப்பு நிலப் பகுதி பல தாவரங்களுக்கும், விலங்குகளுக்கும் வசிப்பிடமாக அமைந்துள்ளது. அத்துடன், இந்த பிரதேசத்தில் வீடமைப்புத்திட்டங்கள் மற்றும் குடியேற்றங்கள் அமைக்கப்படுவதற்கான தேவைகள் எழுகின்றமை போன்றன ரோயல் கொழும்பு கோல்ஃவ் கழகத்துக்கு பெரும் நெருக்கடியாக அமைந்துள்ளது.

'UTE' ஐ பொறுத்தமட்டில், நாம் கொல்ஃவ் விளையாட்டு என்பது இலங்கையில் வேகமாக வளர்ந்து வரும் ஒரு விளையாட்டாக காணப்படுகிறது என கருதுகிறோம். இந்த சந்தர்ப்பத்தில் இலங்கை திறந்த சுற்று போட்டிகளுக்கு அனுசரணை வழங்குவதன் மூலம் எமது வர்த்தக நாமமான கட்டர்பில்லருடன் ஒன்றிணைந்து காணப்படுகிறது. இலங்கையிலும், உலகளாவிய ரீதியிலும் சந்தை முன்னோடியாக கட்டர்பில்லர் அமைந்துள்ளது' என பிரியத் தெரிவித்தார்.

பிரியத் தொடர்ந்து கருத்து வெளியிடுகையில், 'கொல்ஃவ் விளையாட்டு என்பது வசதி வாய்ப்புகள் குறைந்தவர்களுக்கும் பங்கேற்பதற்கு வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. அத்துடன், இந்த விளையாட்டை ஊக்குவிப்பதற்கு இந்த அனுசரணை வாய்ப்பை வழங்கும் என நம்புகிறோம், இதனை கருத்தில் கொண்டு, கடந்த மூன்று ஆண்டுகளாக நாம் தொடர்ச்சியாக எமது அனுசரணைகளை வழங்கி வருகிறோம்' என பிரியத் மேலும் தெரிவித்தார்.

இலங்கையில் கொல்ஃவ் விளையாட்டுக்கான வாய்ப்பு என்பது உயர்ந்த மட்டத்தில் காணப்படுகிறது. தற்போது எம்மத்தியில் ஒரு சில நிபுணத்துவம் வாய்ந்த கொல்ஃவ் வீரர்கள் காணப்பட்ட போதிலும், மொத்தமாக 450க்கும் அதிகமான கொல்ஃவ் வீரர்கள் காணப்படுகின்றனர். எதிர்வரும் வருடங்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது' என பிரியத் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X