2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

பருப்புக்கான இறக்குமதி கட்டண விலைமாற்றத்தினால் ஆலைகளுக்கு இழப்பா?

A.P.Mathan   / 2014 மார்ச் 18 , மு.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச சந்தையில் மைசூர் பருப்பு இறக்குமதிக்கான கட்டண வீத கட்டமைப்பில் ஏற்பட்ட மாற்றமானது உள்நாட்டு சந்தையில் 'துரித நகர்வு நுகர்வு பொருட்களுக்கு' பற்றாக்குறைகளினை ஏற்படுத்தும் என்று சந்தேகிக்கப்படுகின்ற அதேவேளை, பருப்பினை தோல் நீக்கம் செய்து பெறுமதி சேர்க்கும் பணியில் ஈடுபடும் பருப்பு ஆலைகளும் பாரிய பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க நேரிடும்.  இதனையடுத்து கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன், தேசிய பருப்பு கட்டண வீத கட்டமைப்பு தொடர்பில் அவசரமாக அமைச்சரவை கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார்.

மேற்படி இவ்விவகாரத்ததையடுத்து அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அமைச்சின் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர், கொழும்பு புறநகர் பகுதியில் அமைந்துள்ள அதிநவீன தொழில்நுட்ப பருப்பு பிளக்கும் ஆலைக்கு மார்ச் 05ஆம் திகதி விஜயம் செய்து குறைநிறைகளையும் ஏற்படவுள்ள பாதிப்புக்களையும் முன்கூட்டியே அறிந்துகொண்டனர்.

இறக்குமதி கட்டண வீத கட்டமைப்பில் சமீபத்திய திருத்தம் காரணமாக மைசூர் பருப்பினை பிரித்து வேறாக்கும் ஆலைகள் பாரிய இழப்பினை எதிர்நோக்கவுள்ளது. நாங்கள் இப்போது கிட்டத்தட்ட எங்கள் செலவுக்கான இலாபத்தினை இழந்துள்ளளோம். நம் நிறுவனம் நீண்டகாலமாக முழு மைசூர் பருப்பினை இறக்குமதி செய்து வந்தது. இந்த சமீபத்திய கட்டண அமைப்பின் பயன்பாடு மேலும் அத்தகைய இறக்குமதியினை கொடுக்கவில்லை. 7.2 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான எங்கள் அதிநவீன ஆலை மூலம், இறக்குமதி செய்யப்படுகின்ற தோல் நீக்காத முழு மைசூர் பருப்பு இங்கு பிரித்து வேறாக்கும் செயல்பாட்டில் உள்ளது. உலகின் மிக பெரிய சக்திவாய்ந்த ஒன்பது உற்பத்தி வரிகளை வரிசைப்படுத்தி கொண்டு முழு பருப்பினை பிரித்து வேறாக்கும் வசதிகளை எமது ஆலை கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது என களனி - சபுகஸ்கந்த பகுதியில் அமைந்துள்ள தனியாருக்கு சொந்தமான பருப்பு பிரித்தல் மற்றும் நடைமுறைப்படுத்தும் கைத்தொழில் நிறுவன (Pulses Splitting & Processing Industry Ltd) ஆலையின் உரிமையாளரும் தலைவருமான டாக்டர் ஏ.சி. சலீம், வலியுறுத்தித்தினார்.

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் விஜயத்தினை தொடர்ந்து அங்கு இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே டாக்டர் ஏ.சி. சலீம், மேற்ண்டவாறு வலியுறுத்தித்தினார். அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்...

இலங்கையின் விவசாய பொருட்கள் துறையில் ஒரு முக்கிய பங்கினையாற்றி வரும் நிறுவனமான Pulses Splitting & Processing Industry Ltd – 'லீஃப்' மற்றும் 'டுறுஃபீ' என இரண்டு வகையான வர்த்தக குறிகளின் (பிராண்டு) கீழ் தரமான பருப்பு விநியோகத்தினை செய்து வருகினறது. அத்துடன் அதன் செயற்பாடு ஒரு தேசிய சொத்து என முதலீட்டுச்சபை கருதுகிறது.

இலங்கையின் முதலீட்டுச்சபையின் வர்த்தக முயற்சிகளில் உள்ள இரண்டு வேளாண்மை பதப்படுத்தும் ஆலைகளில் Pulses Splitting & Processing Industry Ltd ஒன்றாகும் (மற்றையது-பிரிமா சிலோன் லிமிட்டட்).

இலங்கையில் பருப்பின் முக்கியத்துவம் காரணமாக உள்நாட்டு சந்தையில் அதன் உற்பத்தியின் வெளியீட்டை வெளியிட விஷேட அனுமதி இந்நிறுவனத்திற்குள்ளது. பருப்பு இலங்கையில் அரிசிக்கு அடுத்தப்படியாக இரண்டாவது பிரதான உணவாகும். இலங்கையில் 12 உணவு பொருட்கள் பட்டியலில் பருப்பு முதல் இருக்கை வரிசையில் காணப்படுகின்றது. அது அடிப்படை அத்தியாவசிய பொருளாக  வகைப்படுத்தப்படுகிறது. பருப்பு பிரித்தல் மற்றும் நடைமுறைப்படுத்தும் கைத்தொழில் நிறுவனம் இலங்கையில் வருடாந்த உள்நாட்டு சந்தையில் 55 சதவீத பங்குகளினை கொண்டுள்ளது. அது முழு பருப்பினை இறக்குமதி செய்து இங்கே அவற்றை செயலாக்க மூலம் 15 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்ட வீதத்தினை பெறுமதிப்பு சேர்த்து செயல்படுத்துகின்றது. பருப்பு இலங்கையில் பரவலாக பயன்படுத்தப்படும் ஒரு பிரதான உணவு மற்றும் வீடுகளில் பெரும்பாலானோர் குறைந்தது ஒரு நாளுக்கு ஒரு முறையாவது அதை பயன்படுத்துகின்றனர். 2011ஆம் ஆண்டு சராசரியாக, மாதத்திற்கு 6.3 மில்லியன் அமெரிக்க டொலருக்கு முழு மைசூர் பருப்பு இறக்குமதி செய்யப்பட்டது. இருந்த போதிலும் அதனை பிரிப்பதற்கு 2.2 மில்லியன் அமெரிக்க டொலர் மாதாந்தம் செலவு செய்தது. 70 சதவீதத்திற்கும் அதிகமாக இறக்குமதி செலவினம் முழு பருப்புக்கு செலவுசெய்யப்பட்டுள்ளது. 2008-2013 ஆண்டுப்பகுதியில் இருந்து இலங்கையின் பருப்பு நுகர்வு அதன் ஆரம்ப மொத்த எண்ணிக்கையில் இருந்து கிட்டத்தட்ட 20 சதவீதமாக ஆக உயர்ந்துள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளுக்கு நாங்கள் எமது மிகையான உற்பத்திகளினை அனுப்புவதன் மூலம் ஏற்றுமதிக்கும் பங்களிப்பு செய்கின்றோம். மேலும் கைத்தொழில்துறை அமைச்சின் தற்காலிக இறக்குமதியினுடான ஏற்றுமதி (temporary importation for export processing) திட்டத்தின் உதவி காரணமாக 2008ஆம் ஆண்டில் இருந்து  இன்றுவரை பாதுகாப்பான ஏற்றுமதி வருவாயாக 89.5 மில்லியன் அமெரிக்க டொலர் ஈட்டியள்ளோம். (ரூ 11.7 பில்லியன்)  உள்ள10ர் சந்தையில் பருப்புக்கான விலை கட்டண அதிகரிப்பை நிறுத்துவதற்கு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது  மேல் அதிகாரிகள் உள்ளிட்டோர் சம்பந்தப்பட்ட அரச தரப்பினருடன் கலந்துரையாடி  தீர்வொன்றினை முன்வைக்குமாறு நாம்   கேட்டுக்கொள்கின்றோம் எனவும் டாக்டர் சலீம் தெரிவித்தார்.

2007ஆம் ஆண்டில் எனது அமைச்சின் ஆதரவுடன் ஆரம்பிக்கப்பட்ட இத் தொழிற்சாலையை  பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. இன்று கூட இத்தொழில்துறை ஊடாக உலகளவில் முன்னோடியாக நின்று நம் ஏற்றுமதிக்கு பங்களிப்பு செய்து எங்களை நீங்கள் பெருமைபடுத்தியுள்ளீகள். அரசாங்கத்தினடைய உறுதிமொழியானது.. உங்களை போன்ற  தொழில்துறைகளில் ஈடுபடுவோருக்கு பங்களிப்பு செய்வதற்கு ஆதரவாக இருப்பதேயாகும். எனவே நானும் எனது அதிகாரிகளும் எப்போதும் உங்களுக்கு உதவ தயாராக இருக்கிறோம் என அமைச்சர் ரிஷாட் தெரிவித்தார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட வரிகளினை சுமத்துவது அரசாங்கத்தின் நோக்கம் இல்லை என நானும் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். மற்றும் பெப்ரவரி கட்டண திருத்தங்கள் பொதுவாக இலங்கை நுகர்வோருக்கு சாதகமான விளைவினை ஏற்படுத்தும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இது தொடர்பான கலந்துரையாடல்களை ஆரம்பிக்க உடனடியாக சம்பந்தப்பட்ட அரசாங்க முகவர்களுடன் உங்கள் சார்பாக உரையாற்ற எனது மேல் அதிகாரிகளை நான் கேட்டுக்கொண்டுள்ளேன். அத்துடன் எமது பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷக்கு இது சம்பந்தமாக விளக்கமளிக்கவும் உள்ளேன் என அமைச்சர் ரிஷாட் உறுதிமொழியளித்தார்.

எங்கள் கைத்தொழில்துறை வளர்ச்சியில் உங்களது வலுவான பங்களிப்பை பார்ப்பதற்கு நாங்கள் ஆர்வமாக இருக்கின்றோம். சிறப்பாக உங்களால் முதலீடு செய்யப்பட்ட தொழில்நுட்பமேயாகும். உள்ளூர் சந்தைக்காக பருப்பினை பிரித்தெடுக்கும் செயற்பாட்டிற்கு நீங்கள் பயன்படுத்தும் தொழில்நுட்ப கலையினை சுட்டிக்காட்ட சுவாரசியமாக  உள்ளது என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் செயலாளர் அனுர சிறிவர்தன Pulses Splitting & Processing Industry நிறுவனத்தின் முகாமைத்து குழுவினர் மத்தியில் உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் பருப்பினை பிளப்பது மற்றும் செயலாக்க நடவடிக்கைகள் போன்றன ஒரு சிக்கலான செயல்முறை என்று எவரும் நம்பமாட்டார்கள். நுகர்வோருக்கான வழங்கலை மேற்கொள்வதற்காக ஆலையின் அனைத்து தேவையான வேக முடுக்கிகளின் செயற்பாடுகள் உட்பட அதனை கொடுக்கப்பட்ட இடங்களில் சேர்ப்பதற்கு இரண்டு நாட்களுக்கு மேல் செல்கின்றது என்பதனை நாம் அறிவோம். அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வழிகாட்டுதலின் கீழ் இது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட அரசாங்க முகவர்களுடன் நாம் கலந்துரையாடி உங்களுக்கு உதவுவதற்கு ஒரு பாதையை ஏற்படுத்தவிருக்கின்றோம் என்றார்.

இக்கலந்துரையாடலில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் மேலதிக செயலாளர் அசித்த செனவிரத்ன கலந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .