2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

கராபிட்டிய போதனா வைத்தியசாலையின் புற்றுநோய் சிகிச்சை பிரிவுக்கு வேன்

A.P.Mathan   / 2014 மார்ச் 21 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


காலி கராபிட்டிய போதனா வைத்தியசாலையின் புற்றுநோய் சிகிச்சை பிரிவுக்கு நீண்ட காலமாக நிலவிய வாகன பற்றாக்குறை ஒன்றை நிவர்த்தி செய்யும் வகையில், பீபிள்ஸ் லீசிங்ஸ் அன்ட் ஃபினான்ஸ் பிஎல்சி மூலம் வேன் ஒன்று அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த அன்பளிப்பை பீபிள்ஸ் லீசிங் தலைமையகத்தைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப பிரிவும் காலி கிளையும் இணைந்து மேற்கொண்டிருந்தன.

நிதித்துறையில் முன்னோடியாக திகழும் பீபிள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் பிஎல்சி, தனது சமூக பொறுப்புணர்வு செயற்திட்டங்களின் மூலமாக நிலையாண்மை செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறது. இலங்கையின் முன்னோடியான நிதிசார் கம்பனி எனும் நிலையை பீபிள்ஸ் லீசிங் கம்பனி கொண்டுள்ளதுடன், வங்கி சாராத சேவைகளை வழங்குவதில் இலங்கையின் சந்தை முன்னோடியாகவும் பீபிள்ஸ் லீசிங் காணப்படுகிறது.

3.5 மில்லியன் ரூபா பெறுமதியான வேன் ஒன்று அன்பளிப்பு செய்யப்பட்டிருந்ததன் மூலம், வைத்தியசாலையில் முன்னெடுக்கப்படும் நோயாளர்களின் இல்லங்களுக்கு சென்று நோய் தணிப்பு பராமரிப்பு சேவைகளை மேலும் சிறந்த முறையில் முன்னெடுத்துச் செல்வதற்கு உதவியாக அமைந்திருக்கும். குறிப்பாக கடுமையான நோய் நிலைகளில் காணப்படும் புற்றுநோயாளர்களுக்கு சிகிச்சையளித்த பின்னர், அவர்களை வீடுகளுக்கு அனுப்பி வைக்க உதவியாக இருக்கும்.

இந்த அன்பளிப்பு தொடர்பில் புற்றுநோய் சிகிச்சை நிபுணர் வைத்தியர். உபுல் ஏக்கநாயக்க கருத்து தெரிவிக்கையில், 'சுகமளிக்க முடியாத நிலையை எய்தியுள்ள புற்றுநோயாளர்களுக்கு விசேட பராமரிப்பு கவனிப்பு அவசியமாகிறது. இந்த நோயாளர்களுக்கு எமது வழிகாட்டல் என்பது மிகவும் முக்கியமானதாக அமைந்துள்ளது, ஏனெனில், அவர்களுக்கு நம்பிக்கை வழங்கி பராமரிப்பு செலுத்த வேண்டிய தேவை அதிகளவில் காணப்படுகிறது. இதற்காக வைத்தியர்கள், தாதியாகள் மற்றும் உதவியாளர்களை கொண்ட அர்ப்பணிப்பான செயற்குழுவை நாம் கொண்டுள்ளோம். நோயாளர்களின் வீடுகளுக்கு சென்று, மருத்துவ பரிசோதனைகளை இவர்கள் மேற்கொள்கின்றனர். இந்த செயற்பாடுகளுக்கு இந்த வாகன அன்பளிப்பு என்பது பெறுமதி சேர்க்கும் வகையில் அமைந்திருக்கும்' என்றார்.

புற்றுநோய் பராமரிப்பு சம்மேளனத்தின் கராபிட்டிய கிளையின் தலைவர் அனில் ரஞ்சித் கருத்து தெரிவிக்கையில், இந்த வாகன அன்பளிப்பின் மூலம், இந்த பிரிவில் காணப்பட்ட குறைபாடு நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது. பீபிள்ஸ் லீசிங் கம்பனியின் அனைத்து ஊழியர்களுக்கும் தனது நன்றியை இவர் தெரிவித்திருந்தார். முன்பு மாதத்துக்கு ஒரு நோயாளியை மட்டுமே அவர்களின் இல்லத்துக்கு சென்று பார்வையிடக்கூடிய வசதி காணப்பட்டது. ஆயினும் தற்போது இந்த வாகன உதவியுடன், இந்த எண்ணிக்கையை எம்மால் 10 ஆக அதிகரித்துக் கொள்ள முடியும் என குறிப்பிட்டிருந்தார்.

வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெறும் சுமார் 225 நோயாளர்களுக்கு வர்த்தக நாமம் பொறிக்கப்பட்ட கோப்பைகள் மற்றும் உணவுப் பொதிகள் போன்றனவும் இந்த நிகழ்வின் போது வழங்கப்பட்டிருந்தன. அத்துடன் 140 அதிகாரிகள், வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் சிகிச்சை பிரிவின் ஊழியர்களுக்கு குடைகள் அன்பளிப்பு செய்யப்பட்டிருந்தன.

இந்த அன்பளிப்பு செய்யும் நிகழ்வில் பீபிள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் பிஎல்சி நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியும் பொது முகாமையாளருமான டி.பி.குமாரகே, உதவி பொது முகாமையாளர்களான ரொஹான் தென்னகோன் மற்றும் பிரபாத் குணசேன, சிரேஷ்ட முகாமையாளர்களான அண்டி ரத்நாயக்க மற்றும் ஹசந்த டி சில்வா, பீபிள்ஸ் லீசிங் தலைமையக ஊழியர்கள் மற்றும் காலி கிளை ஊழியர்கள், வைத்திய நிபுணர் வைத்தியர். உபுல் ஏக்கநாயக்க, காலி கராபிட்டிய போதனா வைத்தியசாலையின் புற்றுநோய் சிகிச்சை பிரிவின் இல்லங்களுக்கு சென்று நோய் தணிப்பு பராமரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பிரிவின் தலைவர் அனில் ரஞ்சித் மற்றும் மேலும் பலர் பங்குபற்றியிருந்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X