2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

பெண் கைதிகளின் சிறுவர்களுக்கு ஒருநாள் சுற்றுலா

A.P.Mathan   / 2014 மார்ச் 25 , பி.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


சமூக பொறுப்புணர்வு செயற்பாடுகளில் ஓரங்கமாகவும், சமூக நலன்புரி செயற்பாடுகளின் பங்களிப்பாகவும், McLarens குரூப் ஒஃவ் கம்பனீஸ், வெலிக்கடை சிறைச்சாலையில் சிறை வாசம் அனுபவிக்கும் பெண் கைதிகளுடன் வதியும் 2 முதல் 6 வயதுக்குட்பட்ட பிள்ளைகளுக்கு ஒரு நாள் சுற்றுலாவை ஏற்பாடு செய்திருந்தது.

இதற்கமைவாக, வரலாற்றில் முதல் தடவையாக சிறைச்சாலை ஆளுநர் நாயகத்தின் அனுமதியுடன் ராஜகிரிய McDonalds உணவகத்துக்கு இந்த சிறுவர்கள் அழைத்து செல்லப்பட்டிருந்தனர். இவர்களுடன் சிறைச்சாலை அதிகாரிகளும், பாதுகாப்பு அதிகாரிகளும் சமூகமளித்திருந்தனர். இந்த சிறுவர்கள் தமது காலைப் பொழுதை ராஜகிரிய McDonalds உணவக பகுதியில் செலவிட்டிருந்தார்கள்.

இந்த செயற்திட்டம் தொடர்பில் McLarens ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் தினேஷ் ஜயவர்தன கருத்து தெரிவிக்கையில், 'இந்த சிறுவர்கள் எந்த குற்றத்தையும் செய்யாதவர்கள். இவர்களின் தாயாரின் தவறுதலுக்காக இவர்களும் இந்த சிறைவாசத்தை அனுபவிக்க நேர்ந்துள்ளது. இவர்கள் இந்த உணவக பகுதிக்கு சென்று குதூகலமாக விளையாட்டு பகுதிகளில் விளையாடி மகிழ்ந்த போது, இவர்களின்  முகத்தில் ஆனந்தம் காணப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பிரபல்யமான McDonalds  'ஹெப்பி மீல்ஸ்' உணவு வேளையை இவர்கள் உண்டு மகிழ்ந்திருந்ததோடு, விளையாட்டு பொருள் ஒன்றையும் பெற்றிருந்தனர். தன்னார்வ செயற்பாடு மற்றும் சமூக சேவை என்பது McLarens குழுமத்தின் ஒன்றிணைந் உள்ளம்சமாகும். எமது சமூகத்தைச் சேர்ந்த குறைந்த வசதிகள் படைத்த சிறுவர்களின் நலன் கருதி, சம்பந்தப்பட்ட அதிகார அமைப்புகளுடன் இணைந்து நாம் செயலாற்றி வருகிறோம்' என்றார்

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X