2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

நோர்வேயின் ஜீ.எஸ்.பி. உதவி திட்டத்திற்கான தகுதியினை இலங்கை பெற்றுள்ளது

A.P.Mathan   / 2014 மார்ச் 27 , பி.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


உலகின் மூன்றாவது மிக பெரிய  சந்தையான ஸ்காண்டிநேவியா சந்தை நுழைவாயில் உட்பிரவேசிப்பதற்கான வாய்ப்பு இலங்கைக்கு கிட்டியுள்ளது. இதற்கான அழைப்பு கடந்த 18 ஆம் திகதி நோர்வே குழுவினரால் விடுவிக்கப்பட்டுள்ளது. 75 மில்லியனுக்கு குறைவான மக்கள் தொகை கொண்ட மற்றும் குறைந்த நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளுக்கான நோர்வேயின் ஜீ.எஸ்.பி. உதவி திட்டத்திற்கான தகுதியினை இலங்கையும் பெற்றுள்ளது. இதன் விளைவாக, இலங்கை இப்போது நோர்வே நாட்டின் நல்ல சந்தை அணுகலை பெறவிருக்கிறது என இலங்கைக்கான நோர்வே உயர் ஸ்தானிகர்  கிரைட் லொச்ம் அறிவித்தார்.

ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் கேட்போர் கூடத்தில் கடந்த 18ஆம் திகதி ஜீ.எஸ்.பி. திட்டம் மீதான வாதம் தொடர்பிலான கருத்தரங்கில் கலந்துக்கொண்;டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

உற்பத்திகளுக்கு  பல சந்தைகள்  மற்றும் புதிய வாய்ப்புகள் நோர்வேயினுடாக  கிடைக்கவுள்ளன. நோர்வேயின் இறக்குமதி சந்தை திறன் 100  பில்லியன் அமெரிக்க டொலராக மதிப்பிடப்பட்டுள்ளது. இதன்  காரணமாக உலக நாடுகளுக்கிடையில்  தனிநபர் ஒருவருக்கான மூன்றாவது மிக உயர்ந்த தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட 55 ஆயிரம் அமெரிக்க டொலரினை   கொள்வனவு செய்வதற்கான  உயர்ந்த  வலுவினைக் கொண்ட சந்தையாக நோர்வே கருதப்படுகிறது.  நோர்வே, ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடு  அல்ல. ஆனால் சுவிச்சர்லாந்து, ஐஸ்லாந்து மற்றும் லிச்சென்ஸ்டீன் ஆகிய நாடுகளை உள்ளடகிய  ஐரோப்பிய சுதந்திர வர்த்தக கூட்டமைப்பின் ஸ்தாபக உறுப்பினர். சுதந்திர வர்த்தக  கூட்டமைபின் மூலம் நோர்வே, 25 க்கு மேற்பட்ட சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களை  அதன் பங்காளிகளுடன் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது எனவும் நோர்வே உயர் ஸ்தானிகர் தெரிவித்தார். நோர்வே சந்தை தொடர்பில் உங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்கவே நோர்வே சுங்கத்துறை அதிகாரிகள் இங்கு விஷேடமாக வந்துள்ளனர். அத்துடன் நோர்வே நாட்டின் இருந்து இலங்கைக்கு அதிக ஏற்றுமதி இருக்கும் என்று நான் நம்புகிறேன் என்றார்.

போர் முடிவுக்கு வந்த பின்னர் இலங்கை வலுவான பொருளாதார வளர்ச்சியினை நிரூபித்துள்ளது. சேவை மற்றும் உற்பத்தி துறைகளில் முன்னேற்றம்; காணப்பட்டுள்ளது.. உள்கட்டமைப்புகளில் குறிப்பாக  துறைமுகங்கள் மற்றும் சாலைகளிலும் வளர்ச்சி காணப்பட்டது என்றார் கிரைட் லொச்ம்.  

இவ் அமர்வில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ,ஏற்றுமதி அபிவிருத்தி சபை தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரி பந்துல ஹேககொட மற்றும் மேல் அதிகாரிகள். மேலும்  நோர்வே சுங்க மற்றும்  சுங்க கலால் திணைக்கள பணியகத்தின் சிரேஷ்ட ஆலோசகர் திருமதி. சுசான் நில்சன் இஉதவி பணிப்பாளர்  திருமதி. சிசிலி ஜி. அல்னஸ், ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

அத்துடன் இலங்கையில் முதல் முறையாக நோர்வே சுங்க மற்றும்  சுங்க கலால் திணைக்கள பணியகத்தின் அதிகாரிகள் சர்வதேச வர்த்தகம் தொடர்பில் ஏற்றுமதியாளர்கள் எதிர்கொள்ளும்  பலதரப்பட்ட பிரச்சினைகளை இங்குள்ள ஏற்றுமதியாளர்கள் மத்தியில் தெளிவுபடுத்த வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது.

நோர்வே உயர் ஸ்தானிகர்  கிரைட் லொச்ம்   தொடாந்து அங்கு கருத்து தெரிவிக்கையில் இலங்கைக்கும் நோர்வைக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தக 26மூ,சத வீதம்  வலுவான போக்கில் உயர்ந்துள்ளது. உங்கள்  2008 ஆம் ஆண்டில் இருந்து எங்கள் இருதரப்பு மொத்த வர்த்தகம் 26 சத வீத அதிகரிப்புடன் 31,83 மில்லியன் அமெரிக்க டொலராக காணப்பட்டது. அத்துடன் வர்த்தக சமநிலையும் நமக்கு சாதகமாக காணப்படுகின்றது. 2012 ஆம் ஆண்டில் மொத்த ஏற்றுமதியில் 38 சதவீதத்தை பெற்ற ஆடைத்துறையானது இலங்கையில் இருந்து நோர்வேக்கான பிரதான ஏற்றுமதி பொருளாக உள்ளது என அமர்வில் உரையாற்றிய அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உறுதியான தூர நோக்கின் படி 2020ஆம் ஆண்டு  20 பில்லியன்  அமெரிக்க டொலரினை நோக்கிய  ஏற்றுமதியினை அடைவதற்கான  இலக்காகும். போட்டிமிகு ஏற்றுமதிதுறையில் நோர்வேயின் புதிய ஜீ.எஸ்.பி. உதவி திட்டம் உட்பட ஏனைய ஆதரவு திட்டங்கள் என்பன இலங்கை போன்ற நாடுகளுக்கான சந்தை அணுகலுக்கு இவை ஒரு முக்கியமான பங்கை வகித்து வருகின்றன. இந்த சூழலில் இது போன்ற நம்பிக்கைக்குரிய திட்டங்கள் மூலம், சந்தைகளில் எங்கள் அணுகலின் விரிவாக்கம் குறித்த சாத்தியங்களை ஆராய்வது மிகவும் முக்கியமானதாகும்.

1972 ஆம் ஆண்டு முதல்  இலங்கை நோர்வேயினுடைய ஜீ.எஸ்.பி. பொது வசதிகளின்  பயன்களினை அனுபவித்து வருகிறது. ஆனால் இவ்வாண்டு முதல் நோர்வேயின் ஜீ.எஸ்.பி. பிளஸ் உதவி திட்டத்திற்கான பயன்களினையும் சேர்த்து அனுபவிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. 100 பில்லியன்  அமெரிக்க டொலர் கொண்ட  மிகவும் நம்பிக்கைக்குரிய சந்தைக்கான கதவு இப்போது எமது ஏற்றுமதியாளர்களுக்கு திறக்கப்பட்டுள்ளது.  மத்திய தர  வருமான வகைப்படுத்தல் அடிப்படையில் சார்க் பிராந்தியத்தைச்சோந்த இலங்கை  நோர்வே ஜீ.எஸ்.பி. பிளஸ் உதவி திட்டத்திற்கான நன்மைகள் பெறுகிறது.பெருந்தன்மையான ஆதரவுடன் ஜீ.எஸ்.பி. பிளஸ் உதவி திட்டத்தனை வழங்கும் நோர்வே நாட்டின் அரசுக்கு இலங்கை பாராட்டுகிறது. உலக வர்த்தக அமைப்பின் கொள்கைக்கு ஏற்ப. நோர்வே அரசு எதிர்காலத்திலும்; அதே நிலையை பேணும் என்று நான் நம்புகிறேன.; அத்துடன் எமது சிறப்புமிக்க உற்பத்தி;களான தேயிலை ,ஆடை உட்பட விவசாய பொருட்கள் மீதுள்ள இன்றைய முயற்சிகளினை எங்கள் ஏற்றுமதி சமூத்தினனர் பயனடைவார்கள்.

எனவே தற்போது எடுக்கப்பட்டுள்ள  அனைத்து முயற்சிகளும் நன்மையில் முடியும் என்ற நம்பிக்கையுடன் நான் இருக்கிறேன் எனவும் அமைச்சர் ரிஷாட் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X