2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

புதிய இலங்கை வங்கிக் கிளை திறப்பு

Kogilavani   / 2014 மார்ச் 28 , மு.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.கே.றஹ்மத்துல்லா


அம்பாறை மாவட்டம், அட்டாளைச்சேனை பிரதேசத்திற்கான புதிய இலங்கை வங்கிக் கிளை வியாழக்கிழமை(27) திறந்து வைக்கப்பட்டது.
இக்கிளையானது, கடந்த காலங்களில் அக்கரைப்பற்று இலங்கை வங்கிக் கிளையின் ஒரு பிரிவாக குறிப்பிட்ட சில சேவைகளுடன் மட்டும் இயங்கி வந்தது.

இந்நிலையில் வியாழக்கிழமை(27) முதல் தனிக்கிளையாக அனைத்து சேவைகளையும் வழங்கும் வகையில் புதிய கட்டடத் தொகுதியில் மிகவும் விமர்சையாக திறந்து வைக்கப்பட்டது.

கிளை முகாமையாளர் ஏ.சி.கியாசுதீன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதயாக சிரேஷ்ட பிரதி பொது முகாமையாளர் எச்.எம்.முதியான்சே மற்றும் உதவி பொது முகாமையாளர் கே.பி.ஆனந்த நடேசன், பிராந்திய முகாமையாளர்களான எம்.ஐ.நௌபல், ஜே.ஜி. பிரியந்த குமார, அக்கரைப்பற்று, நிந்தவூர், சம்மாந்துறை, ஒலுவில் ஆகிய இலங்கை வங்கிக் கிளைகளின் முகாமையாளர்கள், வாடிக்கையாளர்கள் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வின் போது சிறந்த வாடிக்கையாளர்களர்களுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X