2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

சோடா பாவனையை வேகமாக குறைக்கும் அமெரிக்கர்கள்

A.P.Mathan   / 2014 ஏப்ரல் 01 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவில் சோடா பாவனை வேகமாக குறைந்துள்ளது. சுமார் ஒரு தசாப்த காலப்பகுதிக்கு முன்னர் ஆரம்பமான இந்த பாவனை குறைவு, கடந்த ஆண்டில் அதிகளவு பிரதிபலிக்கப்பட்டுள்ளது.

2013இல் காபனேட்டட் பான வகைகளின் விற்பனை 3 வீதத்தால் வீழ்ச்சியடைந்திருந்ததென பெவரேஜ் டைஜெஸ்ட் எனும் அமைப்பின் மூலம் முன்னெடுக்கப்பட்ட ஆய்விலிருந்து தெரிவிக்கப்பட்டிருந்தது. 2012 இல் இந்த விற்பனை 1.2 வீதத்தால் குறைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக கொகா கோலா, பெப்சி கோ. ஐஎன்சி போன்ற உலகின் முன்னணி கோலா தயாரிப்பு நிறுவனங்கள் சவாலை எதிர்நோக்கியுள்ளன. உலகின் முதல் வர்த்தக நாமங்களில் ஒன்றாக கொகா கோலா திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X