2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

மாபெரும் இரத்ததான முகாமொன்று சியபத ஃபினான்ஸ் மூலம் ஏற்பாடு

A.P.Mathan   / 2014 ஏப்ரல் 01 , பி.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


நவம் மாவத்தை தலைமையகம், நுகேகொட, கண்டி, மாத்தறை, குருநாகல், அம்பாறை, அநுராதபுரம், நீர் கொழும்பு மற்றும் பேலியகொட ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள தனது அலுவலகங்களின் மூலம் மாபெரும் இரத்த தான முகாமொன்றை சியபத ஃபினான்ஸ் ஏற்பாடு செய்திருந்தது. சியபத ஃபினான்ஸ் (முன்பு சம்பத் லீசிங் அன்ட் ஃபக்டரிங் என அழைக்கப்பட்டது) தனது ஒன்பது வருட நிறைவை முன்னிட்டு தனது சமூக பொறுப்புணர்வு செயற்பாடுகளின் ஓர் அங்கமாக இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. 'ஆரோக்கியம் உங்களுக்கு' எனும் தொனிப்பொருளில் இந்த நிகழ்வு இடம்பெற்றிருந்தது.

சியபத ஃபினான்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரொஷான் நானயக்கார கருத்து தெரிவிக்கையில், 'பொறுப்பு வாய்ந்த கூட்டாண்மை குடிமகன் எனும் எமது நோக்கத்தை மேலும் உறுதி செய்யும் வகையில் இந்த திட்டம் அமைந்துள்ளது' என குறிப்பிட்டார்.

சியபத ஃபினான்ஸ் (முன்னர் சம்பத் லீசிங் அன்ட் ஃபக்டரிங் லிமிடெட் என அழைக்கப்பட்டிருந்தது) என்பது, சம்பத் வங்கி பிஎல்சியின் முழுமையான உரிமைத்துவத்தின் கீழ் இயங்கும் நிறுவனமாகும். 2005ஆம் ஆண்டில் தாபிக்கப்பட்ட இந்நிறுவனம், சிறிய மற்றும் நடுத்தர வியாபாரங்களுக்கும், சில்லறை வியாபார பிரிவு நிறுவனங்களுக்கும் நிதிசார் சேவைகளை வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது. கம்பனி, லீசிங், வாடகை கொள்வனவு, ஃபக்டரிங், நிலையான வைப்பு மற்றும் தங்க நகை அடகுச் சேவை போன்றவற்றை வழங்கி வருகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X