2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

இலங்கை மூலதன சந்தை தொடர்பான பிரசார ஊக்குவிப்பு நிகழ்வு

A.P.Mathan   / 2014 ஏப்ரல் 03 , மு.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் மே மாதம் 30ஆம் திகதி இலங்கை மூலதன சந்தை தொடர்பான பிரசார ஊக்குவிப்பு செயற்றிட்டமொன்று லண்டன் நகரில் முன்னெடுக்கப்படவுள்ளதென அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயற்பாடுகளை கொழும்பு பங்குச்சந்தை மற்றும் இலங்கை பிணையங்கள் பரிவர்த்தனை ஆணைக்குழு ஆகியன லண்டன் பங்கு பரிவர்த்தனை குழு மற்றும் ப்ளும்பேர்க் உடன் இணைந்து முன்னெடுக்கும் என அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டில் இதுபோன்ற வெற்றிகரமான செயற்திட்டங்கள் மும்பை, துபாய், ஹொங் கொங் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் வெற்றிகரமான முன்னெடுக்கப்பட்டிருந்தன. ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், கொமர்ஷல் வங்கி, செலிங்கோ இன்சூரன்ஸ், ஹேலீஸ் பிஎல்சி, அக்சஸ் என்ஜினியரிங், சொஃவ்ட்லொஜிக் ஹோல்டிங்ஸ் மற்றும் டோகியோ சீமெந்து நிறுவனம் ஆகியன தமது பங்குபற்றலை வழங்க முன்வந்துள்ளன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X