2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

முதலாமிடத்தில் சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையம்

A.P.Mathan   / 2014 ஏப்ரல் 10 , மு.ப. 08:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


2014ஆம் ஆண்டின் உலகின் சிறந்த பத்து விமான நிலையங்களில் முதலாமிடத்தை சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையம் தன்வசப்படுத்தியுள்ளது. விமான பயணிகளிடையே முன்னெடுக்கப்பட்டிருந்த ஆய்வொன்றிலிருந்தே இந்த தெரிவு முன்னெடுக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியான இரண்டாவது ஆண்டாக சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையம் இந்த விருதுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிட்டத்தக்கது.

உலகின் முதலாவது ”பச்சை” டேர்மினல் வசதிகளை கொண்டுள்ள சாங்கி, விமான நிலையத்தினுள் வண்ணாத்துப்பூச்சி தோட்டமொன்றை கொண்டுள்ளதுடன், சினிமா தியட்டர், 130க்கும் அதிகமான சொப்பிங்க மற்றும் உணவருந்தும் பகுதிகளையும் கொண்டுள்ளது.

இரண்டாம் மற்றும் மூன்றாமிடங்களை முறையே தென்கொரியாவின் இன்சியன் சர்வதேச விமான நிலையம் மற்றும் ஜேர்மனியின் முனிச் சர்வதேச விமான நிலையம் ஆகிய பெற்றுள்ளன.

முதல் பத்து இடங்களை பிடித்த விமான நிலையங்கள் வருமாறு
1. சிங்கப்பூர் – சாங்கி சர்வதேச விமான நிலையம்
2. தென்கொரியா – இன்சியன் சர்வதேச விமான நிலையம்
3. ஜேர்மனி – முனிச் சர்வதேச விமான நிலையம்
4. ஹொங் கொங் – ஹொங் கொங் சர்வதேச விமான நிலையம்
5. நெதர்லாந்து – அம்ஸ்டர்டாம் சர்வதேச விமான நிலையம்
6. ஜப்பான் – டோக்கியோ சர்வதேச விமான நிலையம்
7. சீனா – பீஜிங் கெப்பிட்டல் சர்வதேச விமான நிலையம்
8. சுவிட்சர்லாந்து – சூரிச் சர்வதேச விமான நிலையம்
9. வட அமெரிக்கா – வன்கூவர் சர்வதேச விமான நிலையம்
10. லண்டன் – ஹீத்துரு சர்வதேச விமான நிலையம்

தென்கொரியா – இன்சியன் சர்வதேச விமான நிலையம்


ஜேர்மனி – முனிச் சர்வதேச விமான நிலையம்

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X