2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

திவிநெகும சமுதாய அடிப்படை வங்கி திறப்பு

Kogilavani   / 2014 ஏப்ரல் 11 , மு.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.ஜே.எம்.ஹனீபா


திவிநெகும திணைக்களம் ஸ்தாபிக்கப்பட்டதன் பின்னர் அம்பாறை மாவட்டத்தில் முதலாவது 'திவிநெகும சமுதாய அடிப்படை வங்கி' வியாழக்கிழமை (10) காரைதீவில் திறந்துவைக்கப்பட்டது.

காரைதீவு பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பீ.எச்.பியசேன கலந்துகொண்டார்.

அம்பாறை மாவட்ட திவிநெகும திணைக்களத்தின் உதவி ஆணையாளர் யூ.பீ.எஸ்.அனுறுத்த பியதாச, மாவட்ட சமுர்த்தி இணைப்பாளர் ஐ.அலியார், நிந்தவூர் பிரதேச செயலாளர் றிபாஉம்மா ஜலீல், காரைதீவு உதவிப் பிரதேச செயலாளர் நிறூபா சிவலோகநாதன், உதவித்திட்டமிடல் பணிப்பாளர்கள், சமுர்த்தி முகாமையாளர்கள்,சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொருநாளதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள் ஊர்பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் பீ.எச்.பியசேன,

'நாட்டில் முன்னெடுக்கப்படுகின்ற சகல அபிவிருத்தி திட்டங்களுக்கும் தமிழ் மக்கள் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும். அவ்வாறு வழங்குவதன் மூலம்தான் இந்த நாட்டின் தேசிய அபிவிருத்திக்கு பங்களிப்புச் செய்தவர்களாக மாறமுடியும்.

இந்த வங்கியின் மூலம் இப்பிரதேச மக்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள முடியும்.

இன்று எமது மக்களை வழிநடத்துகின்ற சில அரசியல் தலைமைகள் இருளை ஒளியாக காட்டிக் கொண்டிருக்கினறனர். கடந்த காலங்களில் தமிழ் மக்களை அரசியல் தலைமைகள் பிழையான வழியில் இட்டுச் சென்றுள்ளனர்.

அந்த கசப்பான நிகழ்வுகளிலிருந்த விடுபட்டு சகலரும் ஒரே நாட்டின் ஒருதாய்பிள்ளைகள் போல் வாழ  நாம் நன்றாக சிந்திக்க வேண்டும். தொடர்ந்தும் நாம் ஏமாற்றப்படுபவர்களாக இருக்கக் கூடாது.

எமது எதிர்கால சந்ததியினருக்காக நல்ல வாழ்வை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அதற்காக நாம் அரசுடன் இணைந்து நல்ல பணிகளை செய்ய முன்வர வேண்டும்' என நாடாளுமன்ற உறுப்பினர் பியசேன கேட்டுக்கொண்டார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X