2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

'செலான் புதுவருட வைப்புகள்'

A.P.Mathan   / 2014 ஏப்ரல் 11 , மு.ப. 09:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


செலான் வங்கியானது இம்மாதத்தின் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை, இலங்கை முழுவதிலும் உள்ள பல்லாயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர் அல்லாதோருக்கான மன மகிழ்ச்சிதரும் ஒரு ஊக்குவிப்பு திட்டம் மற்றும் சுவாரஸ்யமான பரிசு வெகுமதிகளுடன் கொண்டாடுகின்றது.

பாரம்பரியமானதும் பல்லாண்டுகள் பழமையானதுமான புதுவருட 'கொடுக்கல்-வாங்கல்' நடைமுறைகளை கடைப்பிடிக்கும் விதத்தில், ஏப்ரல் 01ஆம் திகதியிலிருந்து 'செலான் புதுவருட வைப்புகள்' மற்றும் 'செலான் டிக்கிரி' கணக்கில் பணத்தை வைப்புச் செய்து, அதனூடாக வெளிப்படையாக வழங்கப்படும் பல்வேறு பரிசுகளையும் தட்டிச் செல்லுமாறு இலங்கையை சேர்ந்த இளையோருக்கும் முதியோருக்கும் அழைப்பு விடுக்கப்படுகின்றது. பரிசுப் பொருட்களின் கையிருப்பு முடியும் வரைக்கும் இந்த ஊக்குவிப்புத் திட்டம் முன்னெடுக்கப்படும்.

'செலான் புதுவருட வைப்புகள்' என்பது விஷேடமாக வடிவமைப்புச் செய்யப்பட்ட 12 மாதகால வைப்புத் திட்டமாக காணப்படுவதுடன், எதிர்வரும் பண்டிகைக் காலத்துக்கு மிகப் பொருத்தமான ஒரு சேமிப்பு பொறிமுறையாகவும் திகழ்கின்றது. ஒவ்வொரு 50,000 ரூபா அல்லது அதற்கு அதிகமான தொகையை வைப்பிலிடும் ஒவ்வொருவருக்கும் அழகிய சிவப்பு, மஞ்சள், இளஞ்சிப்பு மற்றும் பச்சை நிறங்கள் இழையோடிய போர்சலைன் குவளைகள் நான்கினை உள்ளடக்கிய பரிசுப் பொதியொன்று வெகுமதியாக வழங்கப்படும்.

மேலும், 'டிக்கிரி' கணக்கு ஒன்றில் ரூபா 5இ000 இற்கும் ரூபா 19இ999 இற்கும் இடையிலான தொகையை வைப்புச் செய்யும்போது, மூன்று 'புளக்கி டொய்ஸ்' விளையாட்டுப் பொருட்கள் அடங்கிய பொதி ஒன்று அதனது வைப்பாளருக்கு பரிசாக வழங்கப்படும். இப் புத்தாண்டு விடுமுறை காலத்தில் சிறுவர்களுக்கு மிகவும் உகந்த ஒரு பரிசுப் பொதியாக இது அமையும். இதனைப் பயன்படுத்தி அவர்கள் மூன்று மாதிரிகளிலான வாகனங்களை உருவமைத்து மகிழ்வார்கள்.

அதேவேளை, ரூபா 20இ000 அல்லது அதற்கு அதிகமான தொகையை வைப்புச் செய்கின்ற 'டிக்கிரி' கணக்கு வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் 'கேம்ஸ் ஸ்டேசன் டிவி கேம்' ஒன்று வெகுமதியாக வழங்கப்படவுள்ளது. இந்தப் பரிசுகள் எல்லாவற்றையும் பெற்றுக் கொள்ள வேண்டுமாயின், 'செலான் டிக்கிரி' கணக்கு வைப்பாளர்கள் அனைவரும் 15 வயது அல்லது அதற்குக் குறைவான வயதை உடையவர்களாக இருத்தல் அவசியமாகும்.

செலான் வங்கியின் பிரதிப் பொது முகாமையாளர் (சந்தைப்படுத்தல்) திரு. ரிலான் விஜயசேகர இந்த ஊக்குவிப்புத் திட்டம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டானது ஆழமான பாரம்பரியம் மற்றும் சந்தோசமான கொண்டாட்டங்கள் என்ற பொதுவானதொரு அடிப்படையில் சகல இலங்கையரும் ஒன்றிணையும் பல சிறப்பான தருணங்களில் ஒன்றாக காணப்படுகின்றது. இந்த நாட்டிலுள்ள மக்கள் அனைவரையும் அவர்களது இனங்களைக் கடந்து ஒன்றுசேர்க்கின்ற ஒரு தேசிய கொண்டாட்ட நிகழ்வாக இது உள்ளது. பரிசுகளை பரிமாற அதேபோல் எதிர்காலத்துக்காக சேமிப்புகளை மேற்கொள்வதற்கான நேரமாகவும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு இருக்கின்றது. 'அன்புடன் அரவணைக்கும் வங்கி' என்ற வகையில், இவ்வாறான கொண்டாட்டங்களில் பங்கெடுத்து கொள்வதையிட்டும் நாடுமுழுவதுமுள்ள எமது பெறுமதிமிக்க வாடிக்கையாளர்களுக்கு வெகுமதிகளை வழங்குவது குறித்தும்  செலான் வங்கியைச் சேர்நத நாம் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம்' எனத் தெரிவித்தார்.

மேற்குறிப்பிட்ட செலான் புதுவருட வைப்புகளுக்கான வெகுமதிகளை எமது நாடளாவிய ரீதியிலுள்ள 150 வங்கிக் கிளைகளிலும் பெற்றுக் கொள்ளலாம்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X