2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

மருந்துப்பொருட்களின் விலைகள் போட்டிகரத்தன்மைக்கமைய நியமப்படுத்தப்பட நடவடிக்கை

A.P.Mathan   / 2014 ஏப்ரல் 30 , பி.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


மருந்துப்பொருட்களின் விலைகள் போட்டிகரத்தன்மைக்கமைய நியமப்படுத்தப்பட வேண்டியதுடன், ஆரோக்கியமற்ற பொருட்களை தடை செய்யப்பட வேண்டும் என கூட்டுறவுகள் மற்றும் உள்ளக வியாபார அமைச்சின் செயலாளர் ஜி.கே.டி. அமரவர்தன தெரிவித்தார்.

மார்க்ஸ் எச்எல்சி (பிரைவேற்) லிமிடெட் நிறுவனத்தின் எட்டாவது வருடாந்த விற்பனை செயலமர்வில் உரையாற்றும் போது இந்த கருத்தை அமைச்சின் செயலாளர் வெளியிட்டிருந்தார். இந்த நிகழ்வின் விசேட அதிதியாக அமைச்சின் செயலாளர் பங்குபற்றியிருந்தார். கட்டுக்கோப்பான முறையில் பொருட்கள் விநியோகிக்கப்பட வேண்டிய முக்கியத்துவம் குறித்து அவர் கருத்து வெளியிட்டிருந்ததுடன், குறித்த பொருட்களுக்கான தேவை நிலவும் நோயாளர்களுக்கு அந்த மருந்துப்பொருட்கள் அவசியமான காலப்பகுதியில் சென்றடைய வேண்டும் என்றார்.

இந்த நிகழ்வில் பிரதம உரையை இலங்கை பிணையங்கள் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி. நாலக கொடஹேவா வெளியிட்டிருந்தார்.

ஊக்குவிப்பு தொடர்பில் கலாநிதி. கொடஹேவா தனது விசேட உரையில், 'நிறுவனமொன்றின் நிதி, நிர்வாகம், மனித வளங்கள் அல்லது சந்தைப்படுத்தல் போன்ற எந்தவொரு பிரிவைச் சேர்ந்த ஊழியராக இருந்தாலும், அவர் ஒவ்வொருவரும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ விற்பனை செயற்பாட்டில் தமது பங்களிப்பை வழங்குகின்றனர். எனவே, நிறுவனத்தின் சகல ஊழியர்களும் விற்பனை செயற்பாட்டில் பங்களிப்பை வழங்கும் ஒரு அங்கமாக அமைந்துள்ளனர்' என்றார்.

'எனவே, எந்தவொரு தொழில் நிலையில் இருந்தாலும், சகல ஊழியர்களும், தமது வாழ்க்கையில் வெற்றிகொள்வதற்கு தமது விற்பனை ஆளுமைகளை தொடர்ச்சியாக அபிவிருத்தி செய்து கொள்ள வேண்டும்' என்றார்.

கம்பனியின் எதிர்கால திட்டங்கள் மற்றும் எதிர்கால சந்தை வாய்ப்புகள் பற்றிய விபரங்களை மார்க்ஸ் எச்எல்சி பிரைவேற் லிமிடெட் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் ரஜீவ் நானயக்கார முன்மொழிந்திருந்தார். அவர் குறிப்பிடுகையில், 'எதிர்வரும் ஆண்டுகளில் மார்க்ஸ் இலங்கையில் சகல தரப்பினருக்கும் தேவையான மருந்துப் பொருட்களை இனங்கண்டு அவற்றை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது' என்றார்.

'இந்த செயற்பாடானது, நோயாளர்களுக்கு பெருமளவு அனுகூலம் வழங்குவதாக அமைந்திருக்கும். குறிப்பாக சுகாதார அமைச்சு மற்றும் நாட்டுக்கும் நன்மை பயக்கும். இது போன்ற செயற்பாடுகளின் மூலம், சமூக பொறுப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுத்து பங்களிப்பை வழங்க முடியும்' என்றார்.

கடந்த ஆண்டுகளில் மார்க்ஸ் நிறுவனம், கொள்கை அடிப்படையில், பல்வேறு பொது மற்றும் பாரதூரமான நோய் நிலை பராமரிப்புத்துறை சார்ந்த பொருட்களை சந்தையில் விநியோகித்திருந்தது. தற்போது முன்னெடுக்கப்படும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் மூலம் 100 வீத வளர்ச்சியை கம்பனி திட்டமிட்டுள்ளது. மார்க்ஸ் அழகியல் மற்றும் மருத்துவ சாதனங்கள் சந்தையில் தனது ஈடுபாட்டை முன்னெடுக்கிறது.

நானயக்கார தொடர்ந்து கருத்து வெளியிடுகையில், 'பல்வேறு சாதனைகளுக்கு மத்தியில், கம்பனி கடந்த ஆண்டில் பாரதூரமான நோய் நிலைகளுக்கான சிகிச்சைகளுக்கு பயன்படும் பொருட்களை உற்பத்தி செய்யும் உலகின் மூன்று முன்னணி உயிரியல் - தொழில்நுட்ப நிறுவனங்களுடன் கைகோர்த்துள்ளதுடன், மார்க்ஸ் எச்எல்சி நிறுவனத்தின் வரலாற்றில் இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மைல்கல்லாக அமைந்துள்ளது' என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .