2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

பொது மக்களின் சுகாதார நலனுக்கு பங்களிப்பு வழங்கும் ஃபஷன் பக்

A.P.Mathan   / 2014 ஏப்ரல் 30 , பி.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


நாடு முழுவதும் 17 விற்பனையகங்களை கொண்ட இலங்கையின் முன்னணி ஆடை விற்பனையங்களில் ஒன்றான, ஃபஷன் பக் முன்னெடுக்கும் சமூக பொறுப்புணர்வு நடவடிக்கைகளுக்கு அமைவாக, ராகம போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று சிகிச்சை நிலையத்தையும் புனரமைத்திருந்தது.

தனது சமூக பொறுப்புணர்வு செயற்திட்டங்களுக்கு அமைவாக, ஃபஷன் பக் களுபோவில வைத்தியசாலை, லேடி றிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை மற்றும் கொழும்பு கண் வைத்தியசாலை ஆகியவற்றை புனரமைத்திருந்தது. வழமையாக மாணவர்களுக்கு வழங்கிவரும் பங்களிப்புக்கும் மேலாக இந்த செயற்திட்டத்தின் மூலம், பொது சுகாதார நலனில் தான் கொண்டுள்ள அக்கறையை மேலும் உறுதி செய்யும் வகையில் இந்த செயற்பாட்டை முன்னெடுத்துள்ளதுடன், பொது மக்களின் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு பொது சுகாதாரம் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை வலியுறுத்தும் வகையிலும் அமைந்துள்ளது.

ஃபஷன் பக் பணிப்பாளர் ஷபீர் சுபியன் கருத்து வெளியிடுகையில், 'சமூக பொறுப்புணர்வு வாய்ந்த குடிமகன் எனும் வகையில், மூன்று அடிப்படை கொள்கைகளான பொது மக்கள், புவி மற்றும் இலாபம் ஆகியவற்றை ஊக்குவிக்க நாம் முயற்சிக்கிறோம். இதற்கமைவாக, கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையின் புனருத்தாரண செயற்பாடுகளுக்கு நாம் பங்களிப்பு வழங்கியிருந்தோம். இலங்கையின் இரண்டாவது மிகப்பெரிய வைத்தியசாலையாக இது திகழ்கிறது' என்றார்.

சமூகம் என்பதில் மேலும் தனது கவனத்தை செலுத்தும் ஃபஷன் பக், கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையின் இந்த புனருத்தாரண செயற்பாடுகளை, கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையின் அபிவிருத்தி கழகத்தின் தலைவர் வண. துருவில விமலதர்ம மற்றும் உள்நாட்டு மருந்துப்பொருட்களுக்கான பதில் அமைச்சர் கௌரவ பண்டு பண்டாரநாயக்க ஆகியோரின் வேண்டுகோளுக்கிணங்க ஃபஷன் பக் முன்னெடுத்திருந்தது.

வண. விமலதர்ம அவர்கள் இந்த புதிதாக புனருத்தாரணம் செய்யப்பட்ட சிகிச்சை பிரிவை அங்குரார்ப்பணம் செய்திருந்ததுடன், கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் ஏ.ஆர்.எம். தௌஃபீக், ஃபஷன் பக் நிறுவனத்தின் பதில் பொது முகாமையாளர் எஸ்.எச்.எம். ஃபராஸ் மற்றும் ஏனைய அதிகாரிகள் பலரும் இந்த நிகழ்வில் பங்குபற்றியிருந்தனர்.

1994 ஆம் ஆண்டு தனது செயற்பாடுகளை பங்காண்மை வர்த்தகமாக 4 பங்காளர்களுடன் இணைந்து ஃபஷன் பக் ஆரம்பித்திருந்தது. அக்காலகட்டத்தில் 15 ஊழியர்கள் மட்டுமே பணியாற்றியிருந்தனர். தற்போது நாடு முழுவதும் 17 விற்பனையகங்களை கொண்டுள்ளதுடன், மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 1200 ஐ கடந்துள்ளது. இலங்கையின் முன்னணி ஆடையங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X