2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

மஞ்சிக்கு தங்க விருது

A.P.Mathan   / 2014 ஏப்ரல் 30 , பி.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


சிலோன் பிஸ்கட் லிமிடெட்டின் (சிபிஎல்) முன்னணி வர்த்தகநாமமான மஞ்சி, அண்மையில் தேசிய வர்த்தக சம்மேளனத்தின் மூலம் BMICH இல் ஏற்பாடு செய்யப்பட்ட முதலாவது தேசிய வர்த்தக சிறப்பு விருதுகள் வழங்கும் நிகழ்வில் தங்க விருதை தனதாக்கிக் கொண்டது. இந் நிகழ்வின் தொனிப்பொருள் 'உலகளாவிய போட்டித்தன்மைக்கான வர்த்தக செயற்திறன்' ஆக அமைந்திருந்தது. இலங்கை வியாபாரிகள் மற்றும் நிறுவனங்களின் செயற்திறனை மேம்படுத்துவது இந் நிகழ்வின் பிரதான நோக்கமாக அமைந்தது.

இரு தினங்கள் நடைபெற்ற இந் நிகழ்வின்; இரண்டாவது நாள் குழு செயற்திறனுக்கு ஒதுக்கப்பட்டிருந்ததுடன், உற்பத்தி தரம் மற்றும் வினைத்திறனை அதிகரிப்பதற்கு முன்னெடுத்த வெற்றிகரமான திட்டங்களை சமர்ப்பித்த குழுக்கள் அடையாளப்படுத்தப்பட்டன. மஞ்சியின் 'சுவர்ண சக்தி' தர வட்டம் (Quality Circle) குழுவானது 'தரம் மற்றும் உற்பத்தி செயற்திறன் போக்கு' பிரிவின் கீழ் தங்க விருதை வென்றது.

CBL நிறுவனம், சம்மேளனத்தின் முதலாவது தேசிய விருதுகள் விழாவில் துணை நிறுவனங்களான கன்வீனியன்ஸ் ஃபூட்ஸ் (லங்கா) பிஎல்சி மற்றும் சிபிஎல் எக்ஸ்போர்ட்ஸ் (பிரைவட்) லிமிடெட் ஆகியவற்றுக்கு முறையே வெள்ளி மற்றும் வெண்கல விருதுகளை வென்றெடுத்தது.

இச் சாதனை குறித்து பிரதம நிறைவேற்று அதிகாரி இமல் பொன்சேகா கருத்து தெரிவிக்கையில், 'எமது தலைவரின் தாரக மந்திரமான 'தரம் என்பது பழக்கம்' அடிப்படையில் எமது நிர்வாக பணிப்பாளர்களின் தலைமைத்துவ திறன் மற்றும் சிரேஷ்ட நிர்வாகிகளின் திறமைகளால் செயற்பட்டு வருகின்றோம். இந் நிகழ்வில் வழங்கிய விருதுகள், தொழிற்சாலை மட்டம் முதல் சிரேஷ்ட முகாமைத்துவ மட்டம் வரையான ஊழியர்களை செயற்பாட்டு ரீதியில் ஊக்குவிப்பதுடன், பணிபுரிவதற்கு சிறந்த இடமாக CBL நிறுவனத்தை உருவாக்கியுள்ளோம்' என்றார்.

'சுவர்ண சக்தி' தர வட்டம் ஆனது, உலக தர தினத்தையொட்டி உற்பத்தி மற்றும் தர அபிவிருத்தி திட்டம் தொடர்பான குழு பங்குபற்றலுடன் நடத்தப்பட்ட உள்ளக போட்டியின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டது. சான்றிதழ்கள், பயிற்சிகள் மற்றும் பண வெகுமதிகள் மூலம் ஊழியர்கள் தொடர்ச்சியாக ஊக்குவிக்கப்படுகின்றனர்.

பிரதான பெண் மேற்பார்வையாளர் நிலந்தி எக்கநாயக்க கருத்து தெரிவிக்கையில், 'எமது குழு சுய விருப்பத்துடன் உருவாக்கப்பட்டதுடன், தொழிற்சாலையின் தற்போதைய கழிவு பிரச்சனைகளுக்கு தீர்வுகளை வழங்குகிறது. கடந்த ஆறு மாதங்களில் தரவுகள் சேகரிக்கப்பட்டு, தீர்வுகள் வழங்கப்பட்டுள்ளன' என்றார்.

'பிரச்சனைகளை கண்டறிய வேறுபட்ட வழிமுறைகளை கையாண்டு இலக்குகளை வெற்றி கொள்கிறோம். எமது தொழிற்சாலையில் இலவச தகவல்கூடம் அமைந்துள்ளது. நாம் தற்போது கழிவு மட்டத்தை உணர்ந்து கொண்டோம்' என தமது ஈடுபாடு குறித்து தர வட்டத்தை வென்ற பொதியிடல் தலைவர் ரமீஷா செவ்வந்தி தெரிவித்தார்.

'நாம் விருதுளை எதிர்பார்க்காது, கழிவுகளை இல்லாதொழிக்கவும், நிறுவனத்தின் வளங்களை பாதுகாப்பதற்கான தேவையை உணர்ந்து சுயவிருப்பத்துடன் முன்வந்து எம் நேரத்தை செலவிட்டோம். இதன் மூலம் எமது ஒழுக்கம் அதிகரித்துள்ளது. தரமான கண்டுபிடிப்புகள் ஊடாக நிறுவனத்தின் இலக்குகளை வெற்றி கொண்டு எமது சாதனைகள் குறித்து பெருமையடைகின்றோம்' என மேலும் அவர் தெரிவித்தார்.

CBL நிறுவனமானது, அதன் முதற்தர மஞ்சி வர்த்தகநாமத்தை 50 நாடுகளுக்கும் மேலாக ஏற்றுமதி செய்து வருவதுடன், தொடர்ந்து சர்வதேச தரம் மற்றும் சுவையை பேணுவதன் காரணமாக உலகளவில் அங்கீகாரம் பெற்ற அமைப்புக்களிடமிருந்து சான்றிதழ்களை பெற்றுள்ளது. மேலும் இந் நிறுவனம் தேசிய ஏற்றுமதி விருதினை இரு முறை வென்றுள்ள அதேவேளை, உலக செயற்திறன் சிறப்பு விருதினையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X