2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

களனி கேபிள்ஸின் 'பிரதம நிறைவேற்று அதிகாரியின் விருதுகள்'

A.P.Mathan   / 2014 மே 01 , மு.ப. 08:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கையின் முதல் தர இலத்திரனியல் மற்றும் தொடர்பாடல்களுக்கான வயர்களை உற்பத்தி செய்யும் நிறுவனமான களனி கேபிள்ஸ் பிஎல்சி, தமது நிறுவனத்தின் தலைசிறந்த விற்பனை பிரிவின் ஊழியர்களை கௌரவிக்கும் வகையில் பிரதம நிறைவேற்று அதிகாரியின் விருதுகள் நிகழ்வை முன்னெடுத்திருந்தது. தொடர்ச்சியான இரண்டாவது தடவiயாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வு, களனி கேபிள்ஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி மஹிந்த சரணபால அவர்களின் பங்குபற்றலுடன் வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் இடம்பெற்றது. இந்த நிகழ்வின் போது கடந்த ஆண்டில் சிறப்பாக தனது திறமைகளை வெளிப்படுத்தியிருந்த விற்பனை பிரிவைச் சேர்ந்த ஊழியர் தெரிவு செய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டிருந்தது.

இந்த பெருமைக்குரிய விருதை களனி கேபிள்ஸ் நிறுவனத்தின் பிராந்திய விற்பனை முகாமையாளர் ஸ்ரீபதி சமந்த வெற்றியீட்டியிருந்தார். இவர் நிறுவனத்தின் செயற்திட்டங்கள் பிரிவில் பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. தமக்குரிய விருதுடன் ஸ்ரீபதி, பெறுமதி வாய்ந்த பணப்பரிசையும் பெற்றுக் கொண்டார். இவர் கடந்த ஆண்டில் தமக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த இலக்கை விட 30 வீதம் மேலதிகமாக பெறுபேறுகளை எய்தி வெளிப்படுத்தியிருந்ததன் மூலம் இந்த விருதுக்காக தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

இந்த நிகழ்வில் களனி கேபிள்ஸ் பிஎல்சி நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி மஹிந்த சரணபால கருத்து தெரிவிக்கையில், 'எந்தவொரு நிறுவனத்தினதும் முதுகெலும்பாக அர்ப்பணிப்பான விற்பனையணி செயற்படுகிறது. எனவே, குறித்த ஊழியர்களை கௌரவிப்பது என்பது நிறுவனத்தின் முக்கிய பொறுப்பாக அமைந்துள்ளது' என்றார்.

'பிரதம நிறைவேற்று அதிகாரியின் விருதுகள் என்பது, குறித்த வருடமொன்றில் விற்பனை சிறப்புகளில் குறிப்பிடத்தக்களவு உயர்ந்த பங்களிப்பை வழங்கியிருந்த ஊழியரை கௌரவிக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த ஆண்டின் வெற்றியாளர் ஸ்ரீபதி சமந்த தமக்குரிய இலக்கை கடந்திருந்ததுடன், உயர்ந்த தனிநபர் விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்திருந்தார். முழு நிறுவனத்தின் சார்பாக அவரின் பங்களிப்புக்கு நான் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்' என அவர் மேலும் குறிப்பிட்டார்.

களனி கேபிள்ஸ் பிஎல்சி என்பது நூறு வீதம் இலங்கையைச் சேர்ந்த நிறுவனமாகும். நான்கு தசாப்த காலப்பகுதிக்கு மேலாக இலத்திரனியல் மற்றும் தொடர்பாடல் கேபிள்களை உற்பத்தி செய்வதில் இந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது. அண்மையில் நிறைவடைந்த SLIM வர்த்தக நாம சிறப்பு விருதுகள் 2012 இல், களனி கேபிள்ஸ் பிஎல்சி நிறுவனத்துக்கு சிறந்த வர்த்தக நாமத்துக்கான வெண்கல விருது வழங்கப்பட்டிருந்தது. இதே பிரிவில் SLIM வர்த்தக நாமச் சிறப்புகள் விருதுகள் 2013 இல் தங்க விருதை நிறுவனம் வென்றிருந்தது. களனி கேபிள்ஸ் நிறுவனத்துக்கு தரச்சிறப்புக்கான ISO 9000:2008 சான்று, சிறந்த சூழல் முகாமைத்துவத்துக்கான ISO 14001:2004 தரச்சான்றும் வழங்கப்பட்டுள்ளன. தய்கி அகிமொடோ 5S விருதுகளின் தங்க விருதும் களனி கேபிள்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. SLITAD மக்கள் அபிவிருத்திக்கான விருதுகள் வழங்கலில் களனி கேபிள்ஸ் பிஎல்சி தங்கம் வென்றுள்ளது. இலத்திரனியல் மற்றும் தொலைத்தொடர்பாடல்கள் துறையில் 'சுப்பர் பிராண்ட்ஸ்' தர விருதையும் 2008ஆம் ஆண்டில் களனி கேபிள்ஸ் பெற்றுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X