2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

அமானா வங்கிக்கு இலங்கையில் மிகச் சிறந்த விருது

A.P.Mathan   / 2014 மே 02 , மு.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


அண்மையில் நடாத்தப்பட்ட இஸ்லாமிக் ஃபைனான்ஸ் நியுஸ் (IFN) சர்வதேச சிறப்பு வங்கிகள் மீதான வாக்கெடுப்பில் 2013ஆம் ஆண்டில் இலங்கையின் மிகச் சிறந்த இஸ்லாமிய வங்கியாக மீண்டும் ஒருமுறை அமானா வங்கி தெரிவுசெய்யப்பட்டது. மலேஷியாவைத் தளமாகக் கொண்ட ரெட்மனி குறூப் நிறுவனத்தினால் நடாத்தப்பட்ட இந்த வாக்கெடுப்பின்படி பல சர்வதேச சந்தைகளிலும், நாடுகளிலும் மிகச் சிறந்த இஸ்லாமிய நிதி சேவைகளை வழங்கி வரும் நிறுவனங்கள் தெரிவு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டன. இஸ்லாமிக் ஃபைனான்ஸ் நியுஸ் சஞ்சிகையின் வாசகர்கள் மத்தியில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பின்படி இந்த நிறுவனங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. அண்மையில் டுபாயின் ரிட்ஸ் கால்ட்டனில் நடைபெற்ற IFN விருது வழங்கும் விழாவில் இதற்கான விருது அமானா வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளர் / பிரதம நிறைவேற்று அதிகாரி பைசல் சாலிக்கு வழங்கப்பட்டது.

இந்த வெற்றி குறித்து கருத்து வெளியிட்ட பைசல் சாலி அவர்கள் 'வங்கி உருவாக்கப்பட்டதிலிருந்து தொடர்ந்தும் 3 வருடங்கள் இந்த சர்வதேச விருதை வெல்லக் கிடைத்துள்ளமை எமக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இலங்கைச் சந்தையில் மட்டுமன்றி உலக இஸ்லாமிய நிதிச் சந்தையிலும் எமது பிரபல்யத்தை எடுத்துக் காட்டுவதாக இந்த வெற்றி அமைந்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள மக்கள் எம் மீது வைத்துள்ள நம்பிக்கையை இது எடுத்துக் காட்டுகின்றது. எமது சேவை விநியோகத்தில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றம் மற்றும் எமது கிளைகளின் விரிவாக்கத்துடன் அமானா வங்கி அதன் சொத்து மற்றும் பொறுப்புக்களில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை காட்டியுள்ளது. இந்த வருடம் டுபாயில் நடைபெற்ற IFN சர்வதேச விருது வழங்கும் விழாவில் எம்மை வளர்ந்து வரும் வெற்றியாளர்களாக திகழும் அளவுக்கு வங்கியின் வளர்ச்சிக்கு ஆதரவு நல்கிய அனைத்து வாடிக்கையாளர்களுக்கும், பங்காளர்களுக்கும், ஊழியர்களுக்கும் நான் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்' என்று குறிப்பிட்டார்.

இஸ்லாமிக் ஃபைனான்ஸ் நியுஸ் வாக்கெடுப்பானது உலகில் மிகச் சிறந்த வங்கிகளை தெரிவு செய்யும் போது பக்கச்சார்பின்றியும், அனைத்து தரப்புக்களையும் உள்வாங்கும் அனுகுமுறையையும் கடைபிடித்து வருகின்றது. 2005ஆம் ஆண்டு அதன் உருவாக்கத்திலிருந்து தற்போதைய இஸ்லாமிய நிதிச் சந்தை நிலைமைகளை மிகவும் பொருத்தமான விதத்தில் தொடர்ந்தும் வெளிப்படுத்தி வருவதோடு, இந்தத் துறையின் மிகவும் முழுமையான வருடாந்த வாக்கெடுப்பாகவும் இது விளங்குகின்றது. உலகம் முழுவதிலும் உள்ள இஸ்லாமிய நிதி விநியோகஸ்தர்கள், முதலீட்டாளர்கள், வங்கியியல் சாராத நிதி மத்தியஸ்தர்கள், அரசாங்க அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோரை இதில் கலந்து கொண்டு வாக்களிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்த வருடம் டுபாய் சர்வதேச நிதி மையமான ரிட்ஸ் கால்டனில் நடைபெற்ற இந்த நிகழ்வில் உலகின் பல்வேறு இஸ்லாமிய நிதிச் சந்தைகளைச் சேர்ந்த தொழில் நடத்துனர்கள், கல்விமான்கள், கல்வியியலாளர்கள், வர்த்தகர்கள் என பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டார்கள்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X